Nandu Rasam : சளி காய்ச்சலுக்கு சிறந்த மருந்து இதுதான்.. நண்டு ரசம் இப்படி ஈஸியா செய்து பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Nandu Rasam : சளி காய்ச்சலுக்கு சிறந்த மருந்து இதுதான்.. நண்டு ரசம் இப்படி ஈஸியா செய்து பாருங்க!

Nandu Rasam : சளி காய்ச்சலுக்கு சிறந்த மருந்து இதுதான்.. நண்டு ரசம் இப்படி ஈஸியா செய்து பாருங்க!

Divya Sekar HT Tamil
Jun 26, 2023 06:20 AM IST

மிளகு ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம் என்று பல விதங்களில் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். தற்போது நண்டு ரசம் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

நண்டு ரசம்
நண்டு ரசம்

நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் ரசம் இன்றியமையாது. . காய்ச்சல்,சளி, இருமல் போன்றவற்றால் அவதிப்படும் போது ரசம் குடித்தால் சற்று நிவாரணம் கிடைக்கும். ரசமானது நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்வதற்கு மிகவும் உதவுகிறது. மிளகு ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம் என்று பல விதங்களில் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஒவ்வொரு ரசமும் ஒவ்வொரு விதத்தில் ஒரு சுவை தரும். அந்த வகையில் சளிக்கி மிகுந்த நன்மை அளிக்க கூடியது நண்டு ரசம்.

இவற்றைப் பல சுவைகளில் சமைக்கலாம். அதில் முக்கியமானது நண்டு ரசம். நண்டு ரசம் சுவையானது மட்டுமல்லாமல், சளித் தொல்லை, ஜலதோஷம் போக்கும் மருந்தாகப் பயன் படுகிறது என்பது தான் விசேஷம். நண்டு ரசத்தை எப்படித் தயார் செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையாண பொருட்கள்

நண்டு - இடித்து வைத்தது

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 1

பெப்பர் - உடைத்தது

மிளகாய் தூள் - தேவையான அளவு

மஞசள் தூள் - கொஞ்சம்

கொத்தமல்லி தூள் - தேவையான அளவு

இஞ்சி பூண்டு பேஸ்ட்

பிரியாணி இலை

கறிவேப்பிலை

செய்முறை

நண்டு ஒவ்வொன்றிலும் கடிக்கும் பகுதியைக் கணு வரை வெட்டி விட்டு அதை இரண்டாக வெட்டி, தண்ணீரில் சுத்தமாக அலசி எடுத்து தட்டில் வைத்துக் கொள்ளவும்.

கடாய் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இடித்து வைத்த நண்டை போடுங்கள். பின்னர் அதில் வெட்டி வைத்த வெங்காயம், வெட்டி வைத்த தக்காளி, பச்சை மிளகாய், பெப்பர் தூள், மிளகாய் தூள், மஞசள் தூள்,கொத்தமல்லி தூள்,பிரியாணி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தற்போது நண்டு ரசம் ரெடி. இதனை வீட்டில் செய்து பாருங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.