Murugai Keerai Gravy : செமயா ருசியா முருங்கைக்கீரை குழம்பு செய்யலாமா..இதோ பாருங்க!
சுவையான முருங்கைக்கீரை குழம்பு தயார் செய்வது எப்படி என்பது குறித்து இதில் காண்போம்.
முருங்கைக்கீரை குழம்பு
தேவையான பொருட்கள்
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் 2 டீஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -3
கடலைப்பருப்பு -1 டேபிள் ஸ்பூன்
பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
முருங்கைக்காய் கத்தரிக்காய் - 3
முருங்கைக்கீரை இரண்டு கைப்பிடி அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மஞ்சள்தூள் 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - சிறிது
பெருங்காயப்பொடி -2 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் அதில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும். பின்பு இவற்றுடன் தேங்காய் சேர்த்து மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைக்கவும்.
பின்னர் அடுப்பில் கடாய் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பு சேர்த்து வேகவைக்கவும். பாதி அளவு வெந்ததும் அதனோடு முருங்கைக்காய், கத்தரிக்காய் ஆகியவற்றை சேர்த்து வேக வைக்கவும். அவை முக்கால் பதத்துக்கு வெந்ததும், முருங்கைக்கீரையை அதனுடன் சேர்த்து வேகவைக்கவும். பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலா,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின்னர் கொத்தமல்லித் தழையை அதன் மேலே தூவவும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய், கடுகு உளுத்தம் பருப்பு,பெருங்காயப்பொடி,கறிவேப்பிலை போட்டு தாலித்து
இதை தயாரித்து வைத்திருக்கும் குழம்பில் ஊற்றி கலக்கவும். இப்போது சுவையான முருங்கைக்கீரை குழம்பு தயார்.
டாபிக்ஸ்