Healthy Recipes: ருசியான ஆரோக்கியமான மிக்ஸ்ட் ஃப்ரூட் பணியாரம் செய்முறை
ருசியான ஆரோக்கியமான மிக்ஸ்ட் ஃப்ரூட் பணியாரம் செய்முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
பலவகையான பழங்களை வைத்து செய்யப்படும் மிக்ஸட் ஃப்ரூட் பணியாரம் மிகவும் ஆரோக்கியமானது. இந்தப் பணியாரத்தில் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும்.
மிக்ஸ்ட் ஃப்ரூட் பணியாரம் செய்யத் தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - அரை கிலோ
வாழைப்பழம் - 2 (பெரியது)
முட்டை -3
ஸ்ட்ராபெரி - 1 கப்
தேன் - தேவையான அளவு
சப்போட்டா - 1 கப்
மாதுளம் பழம் - 1 கப்
ஆப்பிள் - 1 கப்
சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மிக்ஸ்ட் ஃப்ரூட் பணியாரம் செய்முறை:
முதலில் கோதுமை மாவில் தேவையான அளவு நீரை ஊற்றி கரைத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர், வாழைப்பழம் மற்றும் முட்டையை சேர்த்து பிசைந்து, கரைத்து வைத்துள்ள கோதுமை மாவில் சேர்க்கவேண்டும்.
அடுத்ததாக தேவையான அளவு சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து, நன்றாக கரைத்து, ஊற வைக்கவேண்டும்.
பின்னர், மவை பணியாரக்க குழிக்குள் ஊற்றுவதற்கு முன்பாக ஏற்கனவே தயார் நிலையில் உள்ள ஆப்பிள், மாதுளை மற்றும் சப்போட்டாவை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் இவற்றை மாவுடன் சேர்த்து பிசைந்துகெள்ளவேண்டும்.
இதன் பின்னர், பணியாரக்குழிக்குள் மாவை ஊற்றி பொன்னிறமாக வேகவைத்து எடுத்து தட்டில் போடவும்.
விருந்தினருக்குப் பரிமாறும் தட்டில் கொஞ்சம் தேன் ஊற்றி பரிமாறுவது நல்லது.
பணியாரத்தை தேனில் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இது, பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். விருந்தினருக்கு சூப்பரான ரெசிபி.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்