தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  How To Make Masala Pori

Tasty Snack: மாலைவேளைக்கான சுவையான மசாலா பொரி செய்வது எப்படி?

I Jayachandran HT Tamil
Mar 31, 2023 11:25 PM IST

மாலைவேளைக்கான சுவையான மசாலா பொரி செய்வது எப்படி என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

சுவையான மசாலா பொரி
சுவையான மசாலா பொரி

ட்ரெண்டிங் செய்திகள்

பஃப்டு ரைஸ் மற்றும் பெர்ச் அரிசி என்று அழைக்கப்படும் பொரி பலரின் விருப்பமான சிற்றுண்டி உணவாக உள்ளது. அதிலும், பொரியில் செய்யும் காரப்பொரி, மசாலா பொரி, பேல் பூரி போன்றவற்றின் பெயரைக் கேட்டாலே பலரின் நாக்குகளில் எச்சில் ஊறும்.

நெல்லில் இருந்து தாயரிக்கப்படும் இப்படிப்பட்ட பொரியில் நம்பமுடியாத ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளன என்பதை பலரும் உணர்ந்து இருக்கவே மாட்டோம்.

பொரியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கலை போக்க முடியும்.

பொரியில் உள்ள ஊட்டச்சத்துகள் வயிறு மற்றும் குடலில் உள்ள உணவுத் துகள்களை உடைத்து, செரிமானத்துக்கு தேவையான அமிலங்களின் சுரப்பை ஊக்குவிக்க செய்கிறது.

சரி இனி அரிசி பொரி கொண்டு அருமையான மசாலா பொரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

மசாலா பொரி செய்யத் தேவையானவை-

அரிசி பொரி – 4 கப்,

வறுக்காத கார்ன் ஃபிளேக்ஸ் – 1 கப்,

உப்பு – தேவைக்கு,

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,

மிளகாய்த் தூள் – 2 டேபிள்ஸ்பூன்,

பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்,

உடைத்த முந்திரி – 3 டேபிள் ஸ்பூன்,

வறுக்காத வேர்க்கடலை – 1/4 கப்,

கறிவேப்பிலை – 1 கொத்து,

பொட்டுக் கடலை – 6 டேபிள்ஸ்பூன்,

பல் பல்லாக கீறிய தேங்காய் – 1/4 கப்,

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.

அருமையான மசாலா பொரி செய்முறை-

வெறும் கடாயில் கார்ன் ஃபிளேக்ஸ், வேர்க்கடலை, பொட்டுக் கடலை, தேங்காய் இவை நான்கையும் தனித்தனியே வறுத்து வைக்கவும்.

ஒரு அகலமான கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை வறுத்து, முந்தியை வறுத்து,

உப்பு, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் வதக்கி அரிசி பொரி, வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கிளறி இறக்கவும்.

இப்போது அருமையான மசாலா பொரி ரெடி.

WhatsApp channel

டாபிக்ஸ்