Fish Fry: மீனில் மசாலா உதிருதா.. இப்படி செஞ்சா மீன் வறுவல் அட்டகாசமா இருக்கும்
நாவிற்கு சுவையான மசாலா மீன் வறுவல் எப்படி செய்வது என பார்க்கலாம்.
மீன் வறுவல்
தேவையான பொருட்கள்
முள்ளில்லா மீன் - 250 கிராம்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன்
ப்ளைன் வினிகர் - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
மீன் மசாலா - 2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 துளி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- முள் இல்லாத மீன் இறைச்சியை உங்களுக்கு தேவைப்படும் வடிவில் கட் செய்து நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும். கவுச்சி வாடை போகும் வரை கழுவ வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் சில்லி ப்ளேக்ஸ், மிளகாய் தூள், மஞ்சள் தூள், வினிகர், இஞ்சி, பூண்டு பேஸ்ட் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கைகளால் கலக்கி விழுது போல் வைத்து கொள்ளவும்.
- அதில் கழுவி சுத்தம் செய்து வைத்து இருக்கும் இதில் சேர்த்து நன்றாகப் பிரட்டிக் கலக்கவும். அதை 20 நிமிடங்கள் வரை தனியாக நன்கு ஊற வைக்கவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடான பிறகு, அதில் ஊற வைத்து இருக்கும் மீன் துண்டுகளை சேர்த்து சுமார் 4 நிமிடங்கள் சமைக்கவும்.
- மீன் துண்டுகளை எல்லா புறமும் திருப்பவும், மீன் அனைத்து பக்கங்களிலும் வேக வைக்கவும். மீனை அகற்றி ஒரு தட்டில் ஒதுக்கி வைக்கவும். இதை சூடாக சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவைப்பாட்டால் எண்ணெய்யில் கறிவேப்பிலை போட்டு வறுத்து அதை மீன் மேல் வைத்து கூட ருசித்து பார்க்கலாம்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.