Madurai Roadside Kara Chutney : இப்படி சட்னி செய்து கொடுங்க.. 10 இட்லி கூட சாப்பிடுவாங்க.. மதுரை கார சட்னி!
மதுரை சாலையோரம் கார சட்னி எப்படி செய்வது என்பது குறித்து இதில் காண்போம்.
மதுரை கார சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் நீங்கள் வழக்கத்தை விட அதிகமாக இட்லி சாப்பிடுவீர்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். மதுரை கார சட்னி எப்படி செய்யலாம் என்பது குறித்து இதில் காண்போம்.
தேவையான பொருட்கள்
1 டீஸ்பூன் எண்ணெய்
கடலை பருப்பு 2 தேக்கரண்டி
4-5 பூண்டு பல்
3 சிவப்பு மிளகாய்
3 காஷ்மீரி மிளகாய்
10 சின்ன வெங்காயம்
பெரிய வெங்காயம் அரை
புளி சிறிய உருண்டை
புதினா மற்றும் கொத்தமல்லி
2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
2 டீஸ்பூன் வறுத்த வேர்க்கடலை
கடுகு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெருங்காயம்
செய்முறை
கடாயில், 1 டீஸ்பூன் எண்ணெய், கடலை பருப்பு 2 தேக்கரண்டி சேர்க்கவும். அவற்றை வறுக்கவும். இப்போது 4-5 பூண்டு, 3 சிவப்பு மிளகாய், 3 காஷ்மீரி மிளகாய் சேர்த்து வதக்கவும். சின்ன வெங்காயம் (10) மற்றும் பெரிய வெங்காயம் (பெரியதாக இருந்தால் 1/2, நடுத்தரமாக இருந்தால் 1) சேர்க்கவும். இவை அனைத்தையும் சேர்த்து நன்கு வறுக்கவும். சின்ன வெங்காயம் இல்லையென்றால் பெரிய வெங்காயம் மட்டும் சேர்க்கவும்.
அதிகம் வதக்க தேவையில்லை. சில நிமிடங்கள் வதக்கவும். இப்போது புளி சிறிய உருண்டை அளவு சேர்க்கவும். புளிக்குப் பதிலாக தக்காளியைச் சேர்க்கலாம். சில புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் போட்டு சுருங்கும் வரை வதக்கவும். இப்போது அடுப்பில் உள்ள தீயை குறைக்கவும். பின்னர் 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு அல்லது பொட்டுகடலை, 2 டீஸ்பூன் வறுத்த வேர்க்கடலை சேர்க்கவும். ஒரு நொடி வதக்கவும். பின்னர் தீயை அணைக்கவும்
பின்னர் அவற்றை ஆறவைத்து கரடுமுரடாக அரைக்கவும். இந்த சட்னியின் சிறப்பு கரடுமுரடாக இருப்பது தான். சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அரைக்கும் போது அல்லது வதக்கிய பின் உப்பு சேர்க்கலாம். தாளிக்க 1 டீஸ்பூன் எண்ணெய், கடுகு 1/2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம் ஒரு சிட்டிகை, நறுக்கிய வெங்காயம் சிறிது ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். பின்னர் அரைத்து வைத்த சட்னியை ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து நமக்கு தேவையான பதத்தில் அடுப்பை நிறுத்தவும். இப்போது இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்