Lotus Seed Laddu : உடலுக்கு ஆரோக்கியமான தாமரை விதை லட்டு.. இந்த மாதிரி செய்து பாருங்கள் மக்களே!
உடலுக்கு ஆரோக்கியமான தாமரை விதை லட்டு எப்படி செய்வது என்பது குறித்து இதில் காண்போம்.
தாமரை விதை லட்டு
தேவையான பொருட்கள்
தாமரை விதைகள் - 1/1.5 கப்
உலர்ந்த பழங்கள் - 1 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
ஏலக்காய் - 2
உப்பு - 1 சிட்டிகை
வெல்லம் - 1/4 கப்
தண்ணீர் - 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் நெய் சேர்த்து தாமரை விதைகளை மிருதுவாகும் வரை வறுக்கவும். பின்னர் அதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அதே கடாயில் நெய் சேர்த்து உலர்ந்த பழங்கள் மிருதுவாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அதே கடாயில் தேங்காய் துருவல் ஆகியவற்றையும் வறுக்கவும்.
இவை அனைத்தும் ஆறியவுடன் மிக்சியில் சேர்த்து நன்றாக பொடியாக அரைக்கவும்.உலர் பழங்களை அரைக்கும் போது ஏலக்காய் சேர்க்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து, தண்ணீர் சேர்த்து உருக, வெல்லம் உருகி கெட்டியாக ஆரம்பித்தவுடன் அதில் அரைத்த கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் கலவை சூடாக இருக்கும் போது லட்டுவை உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். கலவை குளிர்ந்தால் அதை உருண்டை பிடிக்க முடியாது. எனவே சூடாக இருக்கும் போதே உருண்டை பிடித்துக் கொள்ளுங்கள்.
செய்து முடித்ததும், உங்கள் அன்புக்குரியவர்களுடன் இந்த ஆரோக்கியமான லட்டுவை உண்டு மகிழுங்கள்.
நன்றி : பிரவிஸ் கிச்சன்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்