Regional Recipe: ருசியான கேரள ஸ்டைல் முட்டை கிரேவி செய்முறை
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Regional Recipe: ருசியான கேரள ஸ்டைல் முட்டை கிரேவி செய்முறை

Regional Recipe: ருசியான கேரள ஸ்டைல் முட்டை கிரேவி செய்முறை

I Jayachandran HT Tamil
Jun 04, 2023 03:34 PM IST

ருசியான கேரள ஸ்டைல் முட்டை கிரேவி செய்முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கேரள ஸ்டைல் முட்டை கிரேவி செய்முறை
கேரள ஸ்டைல் முட்டை கிரேவி செய்முறை

கேரள ஸ்டைல் முட்டைக் குழம்பு பச்சை மிளகாய், கொத்தமல்லி ஃபிளேவர் தக்காளி பியூரியில் சமைக்கப்படும்.

கேரள ஸ்டைல் முட்டைக் குழம்பு செய்யத் தேவையானவை-

2 மேசைக்கரண்டி நெய்

2 வெங்காயங்கள், ஒன்று நன்றாக நறுக்கியது, ஒன்று மெலிதாக வெட்டியது

7 பூண்டு துண்டுகள், நறுக்கியது

அரை செ.மீ. புதிய இஞ்சி

1 மேசைக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி

அரை தேக்கரண்டி மஞ்சள் தூள்

அரை தேக்கரண்டி மிளகாய் தூள்

500 கி. தக்காளிகள், நன்றாக அடித்து, தோலுரித்து, பியூரி ஆக்கப்பட்டது

அரை தேக்கரண்டி உப்பு

1 தேக்கரண்டி வினிகர்

1 தேக்கரண்டி சர்க்கரை

4 முட்டைகள்

கேரள ஸ்டைல் முட்டை குழம்பு செய்முறை:

வாணலியில் நெய்யை சூடாக்கவும், மெலிதாக வெட்டிய வெங்காயத்தைப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பூண்டு மற்றும் இஞ்சியை விழுதாக அரைத்து கொள்ளவும். அதையும் வாணலியில் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வரை சமைக்கவும்.

கொத்தமல்லி இலைகள், தூளாக்கிய மசாலா மற்றும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, சில நிமிடங்கள் வரை சமைக்கவும்.

தக்காளி பியூரியை அதனுடன் சேர்க்கவும். உப்பு சேர்த்து மூடாமல், கிட்டத்தட்ட அது உலர்வாகும் வரை சமைக்கவும். வினிகர், சர்க்கரையை சேர்க்கவும்.

இந்த கலவையை பேக்கிங் பாத்திரத்தில் இட்டு, ஒரு ஸ்பூனைப் பயன்படுத்தி அதில் நான்கு குழிகளை ஏற்படுத்தவும். அதில் ஒவ்வொன்றிலும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றவும். ஓவனில் 160 டிகிரியில் முட்டைகள் செட் ஆகும் வரை சமைக்கவும். பின்னர் அதை வாணலியில் வைத்து குறைவான சூட்டில் சமைத்து, சூடாக பரிமாறவும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.