தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  How To Make Kanchipuram Upma

Regional Recipe: சிறப்பான சுவையான காஞ்சிபுரம் உப்புமா தயார் செய்வது எப்படி?

I Jayachandran HT Tamil
Jun 01, 2023 09:53 PM IST

சிறப்பான சுவையான காஞ்சிபுரம் உப்புமா தயார் செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சுவையான காஞ்சிபுரம் உப்புமா
சுவையான காஞ்சிபுரம் உப்புமா

ட்ரெண்டிங் செய்திகள்

ரவை உப்புமா, சேமியா உப்புமா, இட்லி உப்புமா தவிர இந்த காஞ்சிபுரம் உப்புமாவும் தனிச்சுவை கொண்டதாகும்.

ருசியான காஞ்சிபுரம் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

காஞ்சிபுரம் உப்புமா செய்யத் தேவையான பொருட்கள்:

ரவை - ஒரு கப்

3 பச்சை மிளகாய்

இஞ்சி ஒரு சிறு துண்டு

2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்

சாம்பார் வெங்காயம் - 10 முதல் 15

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் + நெய்

1 டீஸ்பூன் மிளகு

கடுகு- அரை டீஸ்பூன்,

சீரகம்- அரை டீஸ்பூன்,

முந்திரி - 10,

கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

உளுந்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை- சிறிதளவு

உப்பு- தேவைக்கேற்ப

காஞ்சிபுரம் உப்புமா செய்முறை:

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகு, உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் முந்திரி சேர்த்து சிவந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

இதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிறிது உப்பு போட்டு வதக்கவும். 2 - 2 1/2 கப் அளவு நீர் விட்டு மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்.

கொதிக்கும் நீரில் ரவையைக் கொட்டி கிளறி மூடி விட்டு மிதமான தீயில் வைத்து வேக விடவும். விரும்பினால் மேலே சிறிது நெய் விடவும்.

சுவையான காஞ்சிபுரம் உப்புமா தயார்.

WhatsApp channel

டாபிக்ஸ்