Japanese Pizza Style Pan Cake: ருசியான தரமான ஜப்பானிய பிட்சா ஸ்டைல் பான் கேக்
ருசியான தரமான ஜப்பானிய பிட்சா ஸ்டைல் பான் கேக் செய்முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ஜப்பானிய உணவுகளில் அரிசி கேக் எனப்படும் சூஷி தான் பிரபலமானது. உலகளவில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்த சூஷி. அதேபோல் ஜப்பானிய பாணி பிட்சா பான் கேக்கும் மிகுந்த சுவையான உணவாகும். ஜப்பானிய பிட்சா பான் கேக் செய்முறை பற்றி இங்கு பார்க்கலாம்.
ஜப்பானிய பிட்சா ஸ்டைல் பான் கேக் செய்யத் தேவையானவை-
சாஸ் தயாரிக்க
தக்காளி பியூரி - 2 மேசைக்கரண்டி
தக்காளி கெட்ச்அப் - 2 மேசைக்கரண்டி
சோயா சாஸ் - 3 மேசைக்கரண்டி
வார்செஸ்டர் ஷையர் சாஸ் - 70 மி.லி.
சர்க்கரை - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 7 மேசைக்கரண்டி
நீரில் கரைக்கப்பட்ட சோள மாவு ஸ்டார்ச் - 2 மேசைக்கரண்டி
பான்கேக்குகள் தயாரிக்க
டெம்ப்யூரா மாவு அல்லது மைதா மாவு - 150 கி.
இஞ்சி, துருவியது - 50 கி.
முட்டைக்கோஸ், துருவியது - 300 கி.
மயோனீஸ் - 50 கி.
ஸ்பிரிங் ஆனியன், அலங்கரிக்க - 20 கி.
பச்சை மிளகாய், அலங்கரிக்க - 1
ஜப்பானிய பிட்சா ஸ்டைல் பான் கேக் செய்முறை-
சாஸ் செய்வதற்கு, சோள மாவு ஸ்டார்ச்சைத் தவிர மற்ற அனைத்தையும் ஒரு வாணலியில் இட்டு கொதிக்க வைக்கவும். பிறகு அதை கெட்டியாக்க சோள மாவு ஸ்டார்ச்சை சேர்க்கவும். பிறகு இறக்கிவிடவும்.
பான் கேக்குகளை செய்வதற்கு, டெம்ப்யூரா மாவையும் இஞ்சி, முட்டைகோஸையும் சேர்த்து, நீர் சேர்த்து திக்கான கலவையாக செய்து கொள்ளவும்.
இதை ஒரு நான் -ஸ்டிக் பேனில் கொட்டி, பான் கேக்குகளாக வெட்டவும். இரண்டு புறமும் வேகும் வரை சமைக்கவும்.
கொஞ்சம் சாஸ், மயோனீஸ் சேர்த்து, ஸ்பிரிங் ஆனியன், பச்சை மிளகாயால் அலங்கரிக்கவும்.
டாபிக்ஸ்