எதுக்கு கடைக்கு போகணும்! வீட்டிலேயே செய்யலாம் சூப்பர் ரோஸ்மில்க்! உடனே செய்யலாம் வாங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  எதுக்கு கடைக்கு போகணும்! வீட்டிலேயே செய்யலாம் சூப்பர் ரோஸ்மில்க்! உடனே செய்யலாம் வாங்க!

எதுக்கு கடைக்கு போகணும்! வீட்டிலேயே செய்யலாம் சூப்பர் ரோஸ்மில்க்! உடனே செய்யலாம் வாங்க!

Suguna Devi P HT Tamil
Nov 06, 2024 02:26 PM IST

நாக்கு ஊறும் சுவையான ரோஸ் மில்கை நாம் வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் குடிக்கவும் செய்யலாம்.

எதுக்கு கடைக்கு போகணும்! வீட்டிலேயே செய்யலாம் சூப்பர் ரோஸ்மில்க்! உடனே செய்யலாம் வாங்க!
எதுக்கு கடைக்கு போகணும்! வீட்டிலேயே செய்யலாம் சூப்பர் ரோஸ்மில்க்! உடனே செய்யலாம் வாங்க!

தேவையான பொருட்கள்

1 லிட்டர் பால்

3 டேபிள்ஸ்பூன் சப்ஜா விதைகள்

2 டேபிள்ஸ்பூன் வெள்ளரி விதை

2 டேபிள்ஸ்பூன் முந்திரி

2 டேபிள்ஸ்பூன் பாதாம்

3 டேபிள்ஸ்பூன் பிஸ்தா

1 டேபிள்ஸ்பூன் பால் பவுடர்

ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள்

தேவையான அளவு ரோஸ் சிரப்

தேவையான அளவு சர்க்கரை

செய்முறை

முதலில் சப்ஜா விதைகளை நீரில் ஊற வைக்க வேண்டும். பின்பு பாதாம், பிஸ்தா, மற்றும் முந்திரியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் முந்திரி, பால் பவுடர், மற்றும் தேவையான அளவு சர்க்கரையை சேர்த்து அதை நைசாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். இப்பொழுது வேறொரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பால் மற்றும் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும். இந்த பாலில் ஆடை வராமல் கிண்டி கொண்டே இருக்கவும். பால் நன்கு கொதித்து பொங்கி வரும் போது அடுப்பை சிம்மில் வைத்து விட்டு நன்றாக கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். 

சிறிது நேரம் கழித்து அதில் அரைத்து வைத்திருக்கும் மாவை ஒவ்வொரு மேஜைக்கரண்டியாக சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். மாவை முற்றிலுமாக சேர்த்த பின் அதை மீண்டும் கிண்டி கொண்டே  கொதிக்க விடவும். பிறகு அதில் பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை, மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை கொதிக்க விடவும். கொதித்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு பாலை அடுப்பில் இருந்து கீழே இறக்கி அதை நன்கு ஆற விடவும். பால் நன்கு ஆறியவுடன் அதில் ஊற வைத்திருக்கும் சப்ஜா விதைகளை எடுத்து அதில் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். அடுத்து அதில் சிறிதளவு ரோஸ் சிரப்பை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு அதை பிரிட்ஜில் சுமார் 2 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரம் வரை வைக்கவும். 3 மணி நேரத்திற்கு பிறகு அதை பிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி அதன் மேலே சிறிதளவு பிஸ்தாவை தூவி சில்லென்று பரிமாறவும். இப்பொழுது நமது சுவையான மற்றும் சில்லென்று இருக்கும் ரோஸ் மில்க் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகலாம். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.