Groundnut sabji: சப்பாத்திக்கு நிலக்கடலை வைத்து சப்ஜி செய்து பாருங்க
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Groundnut Sabji: சப்பாத்திக்கு நிலக்கடலை வைத்து சப்ஜி செய்து பாருங்க

Groundnut sabji: சப்பாத்திக்கு நிலக்கடலை வைத்து சப்ஜி செய்து பாருங்க

Aarthi V HT Tamil
Jul 31, 2023 08:30 AM IST

நிலக்கடலை சப்ஜி எப்படி செய்வது என பார்க்கலாம்.

நிலக்கடலை சப்ஜி
நிலக்கடலை சப்ஜி

பச்சை நிலக்கடலை - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - அரை முடியில் பாதி 
ஏலக்காய் - தலா 1
கிராம்பு - தலா 2
 பட்டை - தலா 1
முந்திரி - 6
புதினா - தேவையான அளவு
ஆயில் - 1 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு

செய்முறை 

நிலக்கடலையை நன்கு வறுத்து தோல் நீக்கி அது மூழ்கும் அளவு நீர் ஊற்றி 2 மணிநேரம் நன்கு ஊறவைக்கவும். 

  • தக்காளி, வெங்காயம், மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். முந்திரி மற்றும் தேங்காயை அரைத்து வைக்கவும். 
  • குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பிறகு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 
  • வெங்காயம் பொன்னிறமானவுடன், இஞ்சி பூண்டு விழுது மற்றும் சோம்புத் தூள் சேர்த்து வதக்கவும்.
  • பின்பு அதனுடன் தக்காளி, கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், புதினா, கொத்தமல்லித் தழை மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும். 
  • நன்கு வதங்கியவுடன் நிலக்கடலையை நீரை வடித்துவிட்டுச் சேர்த்து, 2 கப் நீர் விட்டு 3 விசில்கள் வரும் வரை வேகவிட்டு இறக்கிவைக்கவும். 
  • குக்கரில் ப்ரஷர் அடங்கியதும் அரைத்த தேங்காய் முந்திரியைச் சேர்த்து பிரட்டி இரண்டு கொதி வந்ததும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கிவிடவும். 
  • பூரி, பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பத்துடன் சாப்பிட அருமையான ருசியான நிலக்கடலை சப்ஜி ரெடி. 
  •  1 ஸ்பூன் சீரகத்தை நெய்யில் தாளித்து இதில் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.