Street Keerai Pakoda: இதோட சுவையே தனி பாஸ்.. நீங்கச் சாப்பிட்டு இருக்கிறீர்களா ரோட்டுக்கடை கீரை பக்கோடா!
சுவையான ரோட்டு கடை கீரை பக்கோடா செய்வது எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
உணவு என்றால் சிலருக்கு அலாதியான பிரியம் தான். அப்படி உணவு தவிர்ப்பது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும். மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று உணவு. உணவு எடுத்துக் கொள்ளாத உயிரினங்களே இந்த உலகத்தில் இருக்க முடியாது.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உணவு எந்த அளவிற்குப் பிடிக்குமோ?. அந்த அளவிற்கு தனக்குப் பிடித்த உணவை செலக்ட் செய்து வைத்திருப்பார்கள். ஒரு சிலருக்கு புரோட்டா பிடிக்கும், ஒரு சிலருக்குப் பிரியாணி, ஒரு சிலருக்கு சாட் ஐட்டம்ஸ் இதுபோல பலருக்கும் சில உணவுகள் மீது பெரிய அதிகம் இருக்கும்.
ஆனால் அனைவரும் விரும்பக் கூடிய உணவுப் பட்டியலில் ஒரு சில உணவுகள் மட்டுமே இருக்கும். அதில் ஒன்றுதான் பக்கோடா. உயர்ரக கடைகளில் பக்கோடா சாப்பிடுவதை விட, சாதாரண ரோட்டு கடைகளில் சாப்பிட்டால் அதனுடைய சுவையே தனி.
அப்படி சுவையான ரெசிபிக்களில் ஒன்றான ரோட்டு கடை கீரை பக்கோடா செய்வது எப்படி என்பது குறித்து இங்கே காணலாம்.
ரோட்டு கடை கீழே பக்கோடா செய்யத் தேவையான பொருட்கள்
- ஒரு கட்டு கீரை ( ஏதாவது ஒன்று)
- இரண்டு கப் கடலை மாவு
- நான்கு தேக்கரண்டி அரிசி மாவு
- தேவைக்கேற்ப முந்திரிப் பருப்பு
- நான்கு பச்சை மிளகாய்
- சிறிய துண்டு இஞ்சி
- அரை டீஸ்பூன் சீரகம்
- தேவையான அளவு உப்பு
- பக்கோடா பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
- முதலில் கீரையை நன்றாகச் சுத்தம் செய்துவிட்டுப் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் பச்சை மிளகாய் மற்றும் முந்திரிப் பருப்பைப் பொடி நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- இஞ்சி துண்டை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, நறுக்கி வைத்திருக்கக்கூடிய பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரிப் பருப்பு மற்றும் சீரகம் உள்ளிட்டவற்றைச் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொண்டு நன்றாகக் கலக்க வேண்டும்.
- கொஞ்சம் கெட்டியாக இருக்கும் படி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உதிரி உதிரியாக அதனைக் கலக்க வேண்டும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதிலிருந்து இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் எடுத்து பக்கோடா மாவில் விட்டுக் கலந்து கொள்ள வேண்டும்.
- அதன் பின்னர் எண்ணெய் காய்ந்ததும் அந்த மாவைச் சிறிது சிறிதாகக் கடாயில் போட வேண்டும்.
- பொன்னிறமாக வேகம் வரை அப்படியே பொறுத்து எடுத்து அழகான தட்டில் வைத்து விட வேண்டும் அவ்வளவுதான் சுவையான கீரை பக்கோடா தயார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்