Mutton Nihari: இது ஒன்னு போதும் எல்லாத்துக்கும்.. சுவையான மட்டன் நிஹாரி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mutton Nihari: இது ஒன்னு போதும் எல்லாத்துக்கும்.. சுவையான மட்டன் நிஹாரி!

Mutton Nihari: இது ஒன்னு போதும் எல்லாத்துக்கும்.. சுவையான மட்டன் நிஹாரி!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 28, 2023 08:29 PM IST

சுவையான மட்டன் நிஹாரி மசாலா செய்வது எப்படி என்பது குறித்துத் தெரிந்து கொள்வோம்.

மட்டன் நிஹாரி
மட்டன் நிஹாரி

தேவையான பொருட்கள்

  • 500 கிராம் ஆட்டுக்கறி
  • இரண்டு வெங்காயம்
  • 4 தேக்கரண்டி கோதுமை மாவு
  • இரண்டு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • மூன்று பிரியாணி இலை
  • ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள்
  • ஒரு தேக்கரண்டி தனியா
  • ஆறு காய்ந்த மிளகாய்
  • இரண்டு கருப்பு ஏலக்காய்
  • ஆறு பச்சை மிளகாய்
  • ஒரு அன்னாசிப்பூ
  • சின்ன கடுக்காய் ஒன்று
  • இரண்டு துண்டு பட்டை
  • ஒரு தேக்கரண்டி சீரகம்
  • மூன்று துண்டு ஜாதி பத்திரி
  • அரை தேக்கரண்டி கருஞ்சீரகம்
  • ஒரு மேசைக்கரண்டி சோம்பு
  • ஒரு தேக்கரண்டி சுக்குப் பொடி
  • ஒரு மேசைக்கரண்டி மல்லி தூள்
  • இரண்டரை தேக்கரண்டி காஷ்மீர் மிளகாய்த்தூள்
  • தேவையான அளவு உப்பு
  • இரண்டு மேசைக்கரண்டி நெய்

நிஹாரி மசாலா செய்முறை

சோம்பு, கருஞ்சீரகம், ஜாதிப்பத்திரி, பட்டை சீரகம், கிராம்பு, கடுக்காய், அன்னாசிப்பூ, ஏலக்காய், காய்ந்த மிளகாய், மிளகு, தனியா, பிரியாணி இலை உள்ளிட்ட பொருட்களை மிதமான தீயில் வறுத்து எடுத்துப் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை

  • அதன்பின்னர் ஆட்டுக்கறியை நன்றாகக் கழுவி அதனோடு சுக்குப்பொடி, மல்லித்தூள், 2 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய்த்தூள், தேவையான அளவு, உப்பு, இஞ்சி பூண்டு விழுது உள்ளிட்டவற்றைப் போட்டுக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் அரைத்து வைத்துள்ள நிஹாரி மசாலாவ பாதி அளவு சேர்த்து நன்றாக அதனோடு கலக்க வேண்டும். இந்த கலவையை ஒரு மணி நேரம் அப்படியே மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
  • ஒரு பிரஷர் குக்கரில் ஒரு கப் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் ஆட்டுக்கறி கலவையைச் சேர்த்துக் கறி பொழியும் வரை வறுத்தெடுக்க வேண்டும். சிறிது நேரத்தில் எண்ணெய் அதில் இருந்து பிரிந்து மேலே வரும்.
  • அதன் பின்னர் அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி கறியை வேக வைக்க வேண்டும். இரண்டு விசில் வந்த பிறகு ஆவி அடங்கியதும் குக்கரைத் திறக்க வேண்டும். அந்த கலவையில் மேலும் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விட வேண்டும்.
  • மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் ஒரு கடாயின் நெய் ஊற்றி அதில் சிறிது வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அந்த அடுப்பை அணைத்துவிட்டு அதனோடு அரை தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய்த் தூள், அரை தேக்கரண்டி நிஹாரி மசாலா சேர்த்து வறுக்க வேண்டும்.
  • பின்னர் இந்த கலவையைத் தீயில் வந்து கொண்டிருக்கும் மட்டன் மசாலாவில் கொட்டி கிளற வேண்டும் அவ்வளவு தான் மட்டன் நிஹாரி மசாலா தயார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.