Green Peas Bonda: சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் இதுதான்.. பச்சைப் பட்டாணி போண்டா
சுவையான பச்சைப் பட்டாணி போண்டா செய்வது எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உணவு அத்தியாவசிய பொருளாகும். இன்றியமையாத விஷயங்களில் முக்கிய இடத்தை வைப்பது உணவு. உணவில்லாமல் இந்த உலகத்தில் எந்த உயிர்களும் வாழ முடியாது. உணவின் மீது அதீத பிரியம் கொண்ட எத்தனையோ மனிதர்கள் இங்கு உள்ளனர்.
உணவு மட்டுமல்லாது ஸ்னாக்ஸ் வகைகள் மீது மோகம் குறையாத எத்தனையோ பேர் இங்கு உள்ளனர். ஸ்னாக்ஸ் வகை என்றாலே வாகனத்தை நிறுத்திவிட்டுச் சாப்பிட்டு விட்டுச் செல்பவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.
சிலருக்கு இனிப்புகள் மீது பிரியுங்கள் அதிகம். சிலருக்குக் கார நொறுக்குத் தீனிகள் மீது பெரிய அதிகம். சிலர் வடை, பஜ்ஜி என்றால் உயிரையே விட்டு விடுவார்கள் அப்படி இந்த ஸ்னாக்ஸ் வகைகள் மீது பலர் வெறித்தனமான அன்பு வைத்துள்ளனர்.
ஆனால் எந்த உணவாக இருந்தாலும் அளவாக எடுத்துக் கொள்வது தான் உடல் நலத்திற்கு நல்லது. அப்படி சத்து மிகுந்த பச்சை பட்டாணி போண்டா செய்வது எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
200 கிராம் பச்சைப் பட்டாணி
ஒரு தேக்கரண்டி துருவிய கேரட்
ஒரு வெங்காயம்
இரண்டு தக்காளி
இரண்டு பச்சை மிளகாய்
சிறிதளவு கொத்தமல்லி, புதினா
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு
போண்டா மாவுக்குத் தேவையான பொருட்கள்
150 கிராம் கடலை மாவு
25 கிராம் அரிசி மாவு
சிறிதளவு உப்பு மற்றும் மிளகாய்த்தூள்
செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாய் உள்ளிட்ட பொருட்களைப் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் பச்சைப் பட்டாணியை வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
உறுப்பினர் மசித்த பச்சைப் பட்டாணியோடு பொடிப் பொடியாக நறுக்கி வைத்திருக்கக்கூடிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, புதினா, கேரட் துருவல் உள்ளிட்டவற்றைச் சேர்த்துப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இசைந்த மாவைச் சிறு சிறு உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
போண்டா மாவுக்குக் குறிப்பிட்டுள்ள பொருட்களைத் தண்ணீர் ஊற்றி சிறிது கெட்டியான பதத்தில் தளர்வாகக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துப் பொரித்து எடுப்பதற்கான தேவையான எண்ணெய்யை ஊற்றிச் சூடேற்ற வேண்டும். உருட்டி வைத்திருக்கக்கூடிய பட்டாணி கலவையை போண்டா மாவில் நனைத்து சூடான எண்ணெய்யில் போட்டுப் பொரித்து எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான சத்து நிறைந்த பச்சைப் பட்டாணி போண்டா தயார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்