Brinjal Biryani : ருசியான கத்திரிக்காய் பிரியாணி.. இதோ இப்படி செய்து பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Brinjal Biryani : ருசியான கத்திரிக்காய் பிரியாணி.. இதோ இப்படி செய்து பாருங்க!

Brinjal Biryani : ருசியான கத்திரிக்காய் பிரியாணி.. இதோ இப்படி செய்து பாருங்க!

Divya Sekar HT Tamil
Aug 13, 2023 11:38 AM IST

ருசியான கத்திரிக்காய் பிரியாணி எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

ருசியான கத்திரிக்காய் பிரியாணி
ருசியான கத்திரிக்காய் பிரியாணி

கத்திரிக்கா

நல்லெண்ணெய் -2 tbs

2 ஸ்பூன் நெய் 

பட்டை 3 துண்டுகள், 

8 கிராம்பு, 

4 ஏலக்காய், 

பிரிஞ்சி இலை 1

பெரிய வெங்காயம் -2 

பச்சைமிளகாய் 3

 தக்காளி 2

உப்பு 1/4 ஸ்பூன்

 மல்லி & புதினா தலா 1 கைப்பிடி 

இஞ்சி பூண்டு விழுது

மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்

மிளகாய் & மல்லித் தூள்கள் தலா 1 ஸ்பூன், 

கரம்மசாலா 1/2 ஸ்பூன் 

தயிர் - 1 tbs

1/2 மூடி எலுமிச்சை சாறு

செய்முறை 

 1/2 கிலோ சீரகசம்பா / பாசுமதி அரிசியைக் கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். 300 கிராம் கத்திரிக்காயை பின்புற நீள காம்பை மட்டும் வெட்டிவிட்டு முழு கத்திரிக்காயை நான்காக கீறி வைக்கவும். கீறியதும் உள்ளே பூச்சி இல்லாததாக பார்த்து எடுத்து வைக்கவும்.

ஒரு கடாயில் 2 tbs நல்லெண்ணெய் விட்டு சூடானதும் அதில் கீறிய முழு கத்திரிக்காயகளை போட்டு வதக்கவும் அரை வேக்காடில் கத்திரி வெந்தால் போதும். பிறகு ஒரு குக்கரில் 2 ஸ்பூன் நெய் விட்டு பட்டை 3 துண்டுகள், 8 கிராம்பு, 4 ஏலக்காய், பிரிஞ்சி இலை 1

அனைத்தும் போட்டு வதக்கி நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பின்பு நறுக்கிய பச்சைமிளகாய் 3, தக்காளி 2, உப்பு 1/4 ஸ்பூன் சேர்த்து தக்காளி குழைய வதக்கிய பின் இதில் மல்லி & புதினா தலா 1 கைப்பிடி.

இஞ்சி பூண்டு விழுது சேர்த்துஅதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின்னர் மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன், மிளகாய் & மல்லித் தூள்கள் தலா 1 ஸ்பூன், கரம்மசாலா 1/2 ஸ்பூன் போட்டு நன்கு கலந்து கிளறி இதில் 1 tbs தயிர் & வதக்கி வைத்த கத்திரிக் காய்களை..

இதில் போட்டு ஒரு முறை நன்கு கிளறவும், அடுப்பை மிதமாக வைத்து பாத்திரத்தை மூடி2 நிமிடங்கள் வேக விடவும். பிறகு மூடியைத் திறந்து கிளறி அரிசி அளவிற்கு இரு மடங்கு நீர் ஊற்றி பிரியாணிக்கு தேவையான உப்பு போட்டு அடுப்பை நன்கு எரிய விடவும்.

இந்த நீர் நன்கு கொதிக்கும் போது ஊறவைத்த அரிசியை இதில் சேர்த்து கிளறி அதன் மேல் 1/2 மூடி எலுமிச்சை சாறு மல்லித்தழைகள் தூவி குக்கரை மூடி 2 விசில்கள் வரும் வரை வைத்து பின்பு இறக்கிவிடவும். பிரஷர் முழுவதும் இறங்கிய பின்பு குக்கரை திறந்து கிளறவும். சூடான ருசியான கத்திரிக்காய் பிரியாணி தயார்.

இதை தக்காளி பச்சடி, தயிர் வெங்காயத்துடன் பரிமாறவும். சைவ / அசைவ குருமா & தால்ஸா இதற்கு பிரமாதமாக இருக்கும். முந்திரிகள் வறுத்து தூவுவது இன்னும் சிறப்பு. கத்திரிக்காயை எண்ணெய்யில் வதக்கி சேர்ப்பது போல நன்கு வாட்டி சுட்டு எடுத்தும் இதில் சேர்க்கலாம்.

குறிப்பு : உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் அளவை கூட்டிக் கொள்ளவும் செய்முறையில் கொடுத்து இருப்பது மிகவும் மிதமான காரம். இந்த அளவுகள் 1/2 கிலோ அரிசியில் பிரியாணி செய்வதற்கே பொருந்தும்.

நன்றி : வெங்கிஸ்_கிச்சன்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.