Chickpea porridge: கர்ப்பப்பையைப் பலப்படுத்தும் உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chickpea Porridge: கர்ப்பப்பையைப் பலப்படுத்தும் உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி?

Chickpea porridge: கர்ப்பப்பையைப் பலப்படுத்தும் உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி?

Marimuthu M HT Tamil
Jan 19, 2024 10:50 AM IST

கர்ப்பப்பையைப் பலப்படுத்தும் உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

Chickpea porridge: கர்ப்பப்பையைப் பலப்படுத்தும் உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி?
Chickpea porridge: கர்ப்பப்பையைப் பலப்படுத்தும் உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி?

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குறைக்கவும்; கருப்பையைப் பலப்படுத்தவும்; குழந்தைப் பேறினை அதிகரிக்கவும் உளுந்து பயன்படுகிறது. ஆகையால் தான், இட்லி மாவு, தோசை மாவு, வடை, கஞ்சி தயாரிப்பில் முக்கிய பகுதிப் பொருளாக உளுந்து இருக்கிறது.

குறிப்பாக உளுந்தில் இரும்புச்சத்து, புரதச்சத்து, ஜிங்க், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் என ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.

உடல் மெலிந்தவர்கள் உளுந்தங்கஞ்சியை சீரான இடைவெளியில் உண்டு வர, பூசிய உடல்வாகினைப் பெறுவர்.

உளுந்தில் இருக்கும் கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்களால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு பலப்படும். கை, கால்களில் மூட்டுப் பிரச்னை தீரும். இதனால், அலுவலகத்தில் நீண்டநேரம் அமர்ந்து பணிசெய்பவர்களுக்கு வரும் இடுப்பு வலியும் எளிதில் தீரும். அத்தகைய உளுந்தினை கொண்டு, உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

உளுந்தம்பருப்பு - 1 கப்;

வெந்தயம் - 1 ஸ்பூன்;

ஏலக்காய்ப்பொடி - 1 டீஸ்பூன்;

சுக்கு பொடி - கால் ஸ்பூன்;

தேங்காய்ப் பால் - 1 கப்;

துருவிய வெல்லம் -1 கப்;

அரிசி - 2 ஸ்பூன்;

நல்லெண்ணெய் - 1ஸ்பூன்

தேங்காய்த்துருவல் - அரை மூடி;

செய்முறை: வெந்தயம் மற்றும் உளுந்தினை எடுத்துக்கொண்டு, அதை சுத்தம் செய்துவிட்டு, மூன்று மணிநேரம் நீரில் ஊறவைக்கவும். பின் அதை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின், ஒரு பாத்திரத்தில் அரைத்துவைக்கப்பட்ட உளுந்து மற்றும் வெந்தயப் பொடியினை தேங்காய்ப்பாலுடன் சேர்த்து, அதில் ஏலத்தூள், வெல்லம், சுக்குப்பொடி ஆகியவற்றை சேர்த்து கிளறவும். பின் அதில் 2 ஸ்பூன் அரிசியை சேர்க்கவும். அது -20 15 நிமிடங்களில் கஞ்சி தயார் ஆகிவிடும்.

- பின், தேங்காய்த்துருவலை நல்லெண்ணெய் சேர்த்து தாளித்துவிட்டு, அந்த கஞ்சியில் சேர்க்கவும். தற்போது சுவையான உளுந்தங்கஞ்சி தயார்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9   

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.