Beetroot Pakoda: ஹீமோகுளோபின் அதிகரிக்க பீட்ரூட் பக்கோடா சாப்பிடுங்க! ஈஸி ரெசிபி பார்க்கலாமா?
Beetroot Pakoda: கர்ப்பிணி பெண்களுக்கும், டீன் வயது பெண்களுக்கு உடலில் போதிய அளவு ஹீமோகுளோபின் தேவைப்படுகிறது. இதன் ஆதாரமாக பல உணவுப் பொருட்கள் இருப்பினும், அதில் முதன்மையானதாக பீட்ரூட் இருந்து வருகிறது. அனைத்து வயதினருக்கும் பீட்ரூட் சாப்பிட்டு ஹீமோகுளோபின் அளவை சரியான அளவில் வைத்துக் கொள்ளலாம்.
உடலுக்குத் தேவையான கனிமங்கள், புரதங்கள், ஊட்டச்சத்துக்கள் என அனைத்தும் சீரான அளவில் தேவைபடுகிறது. இவை சரியான அளவில் கிடைத்தால் மட்டுமே உடல் உறுப்புகளும் சீராக இயங்கும். இந்த நிலையில் பெண்களுக்கு மாதம் தோறும் நடைபெறும் மாதவிடாய் காரணமாக இரும்பு சத்து குறைய வாய்ப்புள்ளது. எனவே பெண்களின் உடலில் இரும்புச்சத்தை நிலை நிறுத்தும் ஹீமோகுளோபின் சரியான அளவில் இருக்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்களுக்கும், டீன் வயது பெண்களுக்கு உடலில் போதிய அளவு ஹீமோகுளோபின் தேவைப்படுகிறது. ஹீமோகுளோபின் ஆதாரமாக பல உணவுப் பொருட்கள் இருப்பினும், அதில் முதன்மையானதாக பீட்ரூட் இருந்து வருகிறது. அனைத்து வயதினருக்கும் பீட்ரூட் சாப்பிட்டு ஹீமோகுளோபின் அளவை சரியான அளவில் வைத்துக் கொள்ளலாம். இத்தகைய குணா நலன்கள் மிக்க பீட்ரூட்டை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் பீட்ரூட் பக்கடோ செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
2 பீட்ரூட், 2 பெரிய வெங்காயம், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 2 டேபிள் ஸ்பூன் ஆரிசி மாவு, 2டேபிள் ஸ்பூன் சோள மாவு போன்றவற்றை சமய பங்கு அளவில் எடுத்து கொள்ள வேண்டும். 1 டீஸ்பூன் மிளகாய் தூள், சிறிதளவு கொத்தமல்லி, சிறிதளவு எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை
பீட்ரூட்டின் மேல் இருக்கும் கடினமான தோலை சீவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த பீட்ரூட்டை துருவி வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், கொத்தமல்லி தழை ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை நறுக்கி மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளை வேண்டும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் ஆரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு, ஆகியவற்றுடன் நறுக்கிய வெங்காயாம், அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட், துருவிய பீட்ரூட், தேவையான அளவு உப்பு என அனைத்தையும் சேர்த்து பக்கோடா மாவு பாதம் வருமாறு பிசைந்து வைக்கவும்.
பக்கோடா போடவும்..
ஒரு கடாயில் பக்கோடா போடுவதற்கு தேவையான அளவு உள்ள எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்கு காய்ந்த பின்னர் , மாவை சிறு அளவுகளாக எடுத்து கொதிக்கு எண்ணெயில் போடவும். பொன்னிறமாக வரும் வரை வேக விட்டு பொரித்து எடுக்கவும். ருசியான, சூடான பீட்ரூட் பக்கோடா ரெடி. சுவையான சட்னியை வைத்து சாப்பிடலாம். பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க ஒன்று விடாமல் சாப்பிடுவர்.
பீட்ரூட் உடலில் உள்ள இரத்த கழிவுகளை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. மேலும் கண்களுக்கு பார்வை திறனை அதிகரிக்கிறது. பீட்ரூட் செரிமான கோளாறை நீக்கும். இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும். பீட்ரூட் உடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். பெண்களுக்கு ஏற்படும் முறையற்ற மாதவிடாய் கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது. உடலின் இரும்பு சத்தை அதிகரிக்கிறது.
டாபிக்ஸ்