Breakfast Recipe: பிரேக் ஃபாஸ்ட்டுக்கு 10 நிமிடத்தில் அவல் பொங்கல் செய்து அசத்துங்க! உப்புமாவை விட ஈஸி!
காலை உணவுக்கு பத்தே நிமிடத்தில் அவல் பொங்கல் எப்படி செய்வது என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
காலையில் பரபரப்பாக வேலை நடக்கும் பொழுது, கை கொடுப்பது இட்லியும் தோசையும் தான். ஆனால் மாவு தீர்ந்து விட்டால்? கவலை வேண்டாம் இருக்கவே இருக்கு உப்புமா. அதுவும் ஒரு நாளைக்கு மேல் நீண்டால் வீட்டில் எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்து விடும். காலை உணவு வித்தியாசமாக இருக்க வேண்டும். அதே சமயம் எளிதில் செய்யக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
எல்லாருக்குமே காலை உணவு மிகவும் முக்கியமானது. உங்களை புத்துணர்ச்சியாகவும், ஆற்றலுடனும் வைத்திருக்க நல்ல ஆரோக்கியமான காலை உணவை சாப்பிட வேண்டும். அந்த வகையில் ஈஸியான அதே சமயம் ஆரோக்கியமான ஒரு காலை உணவை இன்றைய பதிவில் பார்க்கலாம். உண்மையில் உப்புமா செய்வதை விட இது மிகவும் சுலபம். பருப்பை குக்கரில் வேக வைத்து இறக்கினால் போதும் சட்டுனு பத்து நிமிஷத்தில் காலை உணவாக அவல் பொங்கல் செய்திடலாம்.
அவல் பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்-
அவல் - அரை கப்
பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
நறுக்கிய இஞ்சி - அரை டீஸ்பூன்
உடைத்த முந்திரி பருப்பு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அவல் பொங்கல் செய்முறை-
முதலில் அவலை 2-3 முறை கழுவி, தண்ணீரில் நன்கு அலசிய பின் வடித்து வைக்கவும்.
பருப்பு வேக வைக்கும் முன் இதை செய்ய மறக்காதீர்கள்.
இப்போது ஒரு பிரஷர் குக்கரில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து பாசிப்பருப்பை மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
இதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் சிறிதளவு சீரகம் சேர்த்து வேக வைக்கவும்.
3-4 விசில் வந்த பிறகு அடுப்பை அணைக்கவும்.
விசில் அடங்கிய பிறகு குக்கரின் மூடியை திறந்து பாசிப்பருப்பை நன்கு மசித்து கொள்ளவும்.
பருப்பு மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
இந்த பருப்பு கலவையை மீண்டும் சூடாக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் ஊற வைத்துள்ள அவல் சேர்த்து நன்கு மசித்து கலக்கவும்.
அவல் மற்றும் பருப்பு ஒன்று சேர கலந்து பொங்கல் பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைக்கவும்.
இப்போது உங்களை தாளிப்பதற்கு ஒரு கடாய் அல்லது தாளிப்பு கரண்டியில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
இதனுடன் உடைத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
முந்திரியின் நிறம் மாறத் தொடங்கும் பொழுது மிளகு, சீரகம், இஞ்சி, கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். தாளிப்பு கருகாமல் கவனமாக பார்த்துக் கொள்ளவும்.
நீங்கள் விரும்பினால் மிளகு சீரகத்தை இடித்தும் சேர்த்துக் கொள்ளலாம்.
பின்னர் தாளிப்பை உங்களுடன் சேர்த்து நன்கு கிளறி சூடாக பரிமாறவும்.
மிகவும் சுலபமான இந்த அவல் பொங்கல் ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.
டாபிக்ஸ்