Kitchen Tips: சமையலறைகளில் பல்லிகள் பயமுறுத்துகின்றனவா? இதோ தீர்வு!
சமையலறையில் பயமுறுத்தும் பல்லிகளை விரட்டும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்
என்னதான் பார்த்து பார்த்து சுத்தம் செய்தாலும் நம் வீட்டு சமையலறையில் எங்கிருந்தோ பல்லிகள், கரப்பான் பூச்சிகள் வந்துவிடுகின்றன. வீட்டுக்குள் அவை புகுந்துவிட்டால், பிறகு அவற்றை விரட்டுவது ரொம்பவே கஷ்டமாகிவிடும்.
பொதுவாக கோடைக்காலத்திலும் மழை பெய்யும் நாட்களிலும் சமையலறையில் பல்லிகள் அதிகம் காணப்படுகின்றன. குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் பல்லியை கண்டல் மிகவும் பயப்படுவார்கள். சமைக்கும்போது ஒருவேளை தவறுதலாக பல்லி உணவுக்குள் விழுந்துவிட்டால் அது விஷமாகி உயிரைப் பறித்துவிடும் வாய்ப்பு உள்ளது.
எனவே சமையல்கட்டுக்குள் இருந்து இயற்கை வழிகளில் பல்லிகளை விரட்டும் வழிமுறைகள் பற்றி இங்கு பார்ப்போம்.
வெங்காயத்தால் பல்லிகளை விரட்டலாம்-
தேவையான பொருட்கள்:
1 வெங்காயம்
ஊசி நூல்
பல்லிகளை விரட்டும் முறை-
வெங்காயத்தின் தோலை உரித்து, ஊசி மற்றும் நூலின் உதவியுடன் அடுக்கடுக்காக சொருக வேண்டும். எலுமிச்சம்பழம், மிளகாய் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளவும், பல்லி எங்கிருந்து சமையலறைக்குள் வரும் அல்லது எங்கு இருக்குமோ அந்த இடங்களில் தொங்கவிடவும். பல்லிகளுக்கு வெங்காயத்தின் வாசனை பிடிக்காது, எனவே இந்த வெங்காயத்தைத் தொங்க விட்டால் அதன் வாசனையால் பல்லிகள் சமையலறைக்கு வராது.
பல்லிகளை விரட்ட தயாரிக்கப்படும் ஸ்ப்ரே-
சமையலறையிலிருந்து பல்லிகளை அகற்ற வீட்டில் ஸ்ப்ரேயை தயார் செய்து ஒரு நாளைக்கு 3-4 முறை தெளிக்கவும்.
ஸ்ப்ரே செய்வதற்கான பொருட்கள்-
வெங்காயம் மற்றும் பூண்டு ஜூஸ்
டெட்டால் திரவம் அல்லது சோப்பு நன்றாக அரை எடுத்துக்கொள்ளவும்
அரைத்த கிராம்பு போடி
எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு சமையலறையில் மூன்று நான்கு முறை தெளிக்கவும். வெங்காயம், பூண்டு, கிராம்பு மற்றும் டெட்டால் சோப்பு ஆகியவை கடுமையான வாசனையைக் கொண்டிருப்பதால், பல்லிகள் அதன் வாசனையால் சமையலறையிலிருந்து விலகி இருக்கும்.
பல்லிகளை விரட்ட இரண்டாவது ஸ்ப்ரே-
தேவையான பொருள்
ஒரு குவளை நீர்
டெட்டால் திரவம் 2 டீஸ்பூன்
வெங்காய சாறு 1 டீஸ்பூன்
எலுமிச்சை சுவை அல்லது சிட்ரிக் அமிலம் 1 டீஸ்பூன்
இவை அனைத்தையும் ஒரு குவளையில் எடுத்து நன்கு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும். சமையலறையில் மூன்று முதல் நான்கு முறை ஸ்ப்ரே செய்யலாம். இந்த ஸ்ப்ரேயில் ஒரு வலுவான வாசனை உள்ளது, பல்லிகள் அதன் வாசனையை பொறுத்துக்கொள்ள முடியாது. அதன் வாசனையிலிருந்து பல்லிகள் ஓடிவிடும். சமையலறையில் இருக்கும் பல்லிகளை அகற்ற இந்த முறைகளைப் பயன்படுத்தலாம்.
டாபிக்ஸ்