Business: அள்ள அள்ள வரும் பணத்துக்கான மந்திரகோல் இது!
அள்ள அள்ள வரும் பணத்துக்கான மந்திரகோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தக் காலத்தில் பணம் சம்பாதிப்பது என்பது மிகச் சிரமமான விஷயமாகும். அதுவும் கோடிக்கணக்கான பணத்தை ஈட்டுவது என்பது குதிரைக் கொம்பாகும். இருப்பினும் சில உத்திகளைக் கையாண்டால் நீங்களும் எளிதாகக் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம். அப்படிப்பட்ட பணத்தைத் தரும் மந்திரக் கோல் பற்றி இங்கு பார்க்கலாம்.
முதலில் வாழ்க்கையின் அனுபவங்களை சேகரித்துக்கொள்ளுங்கள், பொருட்களை சேமிக்க வேண்டாம். செலவுகளிலும் விடுமுறை நேரங்களிலும் அதிகம் சேமிப்பதற்கான வழிகளை சொல்கிறார் பொருளாதார நிபுணர் வள்ளியப்பன்.
நாம் வாழ்வது பொருட்களால் நிறைந்த ஒரு உலகம். இந்தப் புதிய நூற்றாண்டில் பணம் சம்பாதிப்பதில் நமது கண்ணோட்டம் வேறு வகையில் மாறி விட்டது. இன்றைய பரம்பரை அதன் வருமானம் எல்லாவற்றையும் அனுபவங்களைப் பெறுவதற்காக செலவழிப்பதையே விரும்புகிறது.
பொருட்களை வாங்கி குவிப்பதை விரும்புவதில்லை. இதுபற்றி வள்ளியப்பன் மேலும் கூறுகையில், “நம்முடைய பெற்றோர்கள், எதிர்காலத்துக்காக கவனமாக சேமித்து வைத்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்து பார்ப்பதற்கு முன்பே, வாழ்க்கை அவர்களை கடந்து சென்று விட்டது. நாமும் இன்று முதலீடுகள் செய்ய விரும்புகிறோம். கூடவே, சோஷியல் மீடியாவில், வேடிக்கையான விஷயங்களை செய்வதை படமெடுத்து பதிவுசெய்ய விரும்புகிறோம்” என்கிறார்.
பழைய வாட்ச்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றை விற்று விடுங்கள். அந்தப் பணத்தை அனுபவங்களைப் பெறுவதற்கான செலவுகளுக்காக சேமிப்பு கணக்கில் போட்டு வையுங்கள்.
தினசரி செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். வீட்டு மின்சார பில்லைக் குறைக்க, எல்இடி லைட்ஸுக்கு மாறுவதும் உதவக்கூடும்.
ஓய்வுக்காலம் மற்றும் அவசரநிலைக்காக சேமித்து வைக்கிறீர்கள் என்றால், இரண்டு விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். முதல் விஷயம் பணவீக்கம், உங்கள் சேமிப்பின் மதிப்பை பெரிய அளவில் குறைத்து விடும். அதனால் ஆண்டுதோறும் உங்கள் சேமிப்பில், குறைந்தபட்சம் 4 சதவீதத்தையாவது அதிகரித்து கொண்டே இருக்க வேண்டும். நிலம், நிதி முதலீடுகள் அல்லது லாபம் தரும் ஸ்டாக்குகளை கவனமாக கண்காணிக்க வேண்டும். கிரெடிட் கார்டுகளில் கடன் வாங்குவது, இஎம்ஐ போன்ற வற்றையும் முற்றிலும் நீக்க வேண்டும், இவையெல்லாம், உங்களுடைய நீண்டகால சேமிப்பில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும்.
அனுபவங்களைப் பெறுவதற்காக நீங்கள் சேமிக்கும் பணத்தை, அதிகம் லாபம் ஈட்டும் சேவிங்க்ஸ் அக்கவுண்டில் போட்டு வைக்க வேண்டும். தினசரி அதைக் கண்காணித்திடுங்கள், ஏனென்றால், அதுவே உங்களை இன்னும் அதிகம் சேமிக்க உந்துதலாக மறைமுகமாக மாறி விடும். இந்த கணக்குக்காக, எந்த கார்டையும் வாங்காதீர்கள், அதனால் பணத்தை எடுப்பதற்கான ஆசையைத் தடுத்திடலாம். ஒரு மாதம் உலகச் சுற்றுலா செல்லத் திட்டமிடுகிறீர்கள் என்றால், நீங்கள் மிகவும் கட்டுப்பாடான டூரிஸ்ட் என்றாலும் கூட, நீங்கள் விடுமுறையில் இருக்கும் காலத்துக்கு தேவைக்கு அதிகமாக சேமிப்பதே நல்லது.
தேவையற்ற செலவுகள், வீணாக உடலை வருத்தும் பழக்கங்களை வைத்திருப்பதால் ஏற்படும் மருத்துவச் செலவுகள், ஆடம்பரமாக உடைகளில் செலவழித்தல் போன்றவற்றை நிறுத்தினாலே உங்கள் கஜானா விரைவில் பணத்தால் நிரம்பும்.
டாபிக்ஸ்