Aloo Gobi: 10 நிமிடத்தில் எப்படி ஆலு கோபி செய்வது?
எளிதாக ஆலு கோபி எப்படி செய்வது என பார்க்கலாம்.
ஆலு கோபி மிகவும் பிரபலமான ஒரு உன்னதமான உணவாகும். இந்த சுவையான கறி வெறும் 10 நிமிடங்களில் தயாராகிவிடும். ஆலு கோபி குழந்தைகளாலும் விரும்பப்படுகிறது. இந்த ஒரு எளிய ஆலு கோபி எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
காலிஃபிளவர் - 500 கிராம்
உருளைக்கிழங்கு - 250 கிராம்
நெய் - 1/4 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை
- உருளைக்கிழங்கை வேகவைத்து தனியாக வைக்கவும். கோபி துண்டுகளாக நறுக்கி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து, தண்ணீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது ஒரு கடாயில் நெய் அல்லது எண்ணெயை சூடாக்கி, சீரகத்தை வறுக்கவும்.
- சீரகம் வதங்கியதும், துருவிய இஞ்சியைச் சேர்த்து வதக்கவும், பின்னர் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இப்போது காலிஃபிளவர், உருளைக்கிழங்கு துண்டுகள், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து 2-3 நிமிடம் நன்கு வதக்கவும்.
- பின்னர் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, கொத்தமல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து எல்லாம் நன்றாக கலக்கும் வரை சில முறை கலக்கவும்.
- தீயைக் குறைத்து, கடாயை மூடி, காய்கறிகள் மென்மையாகும் வரை சமைக்கவும், இடையில் கிளறவும்.
- இறுதியாக கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும். அவ்வளவு தான் ஆலு கோபி கறி தயார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்