Tasty Fish Food: கேரளா ஸ்பெஷல் மீன் மொய்லி செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tasty Fish Food: கேரளா ஸ்பெஷல் மீன் மொய்லி செய்வது எப்படி?

Tasty Fish Food: கேரளா ஸ்பெஷல் மீன் மொய்லி செய்வது எப்படி?

I Jayachandran HT Tamil
Jan 23, 2023 04:00 PM IST

கேரளா ஸ்பெஷல் மீன் மொய்லி செய்வது எப்படி? என்று இங்கு பார்க்கலாம்.

கேரளா ஸ்பெஷல் மீன் மொய்லி
கேரளா ஸ்பெஷல் மீன் மொய்லி

முக்கியமாக ஒமிகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதனால் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

இந்த கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியமாக அமைகிறது.

கேரளாவில் மீன் குழம்பு சூப்பராக இருக்கும். அதிலும் மீன் மொய்லி இன்னும் அருமையாக இருக்கும். இப்போது கேரளா ஸ்டைல் மீன் மொய்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வாவல் மீன்/கிங்பிஷ் – 250 கிராம்

வெங்காயம் – 1

பச்சை மிளகாய – 2

தக்காளி – 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

மிளகு தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தேங்காய் பால் – 1 கப்

கறிவேப்பிலை – சிறிது

கடுகு – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

கொத்த மல்லி – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

வெங்காயம், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும். தக்காளியை பெரிய துண்டு களாக வெட்டி கொள்ளவும்.

மீனை நன்கு சுத்தமாக கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,

பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து

சிறிது வதக்கிய பின்னர் தேங்காய் பால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

குழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள மீன் துண்டுகள், தக்காளியை சேர்த்து, 10 நிமிடம் குறைவான தீயில் மூடி போட்டு கொதிக்க விட வேண்டும்.

குழம்பு திக்கான பதம் வந்தவுடன் அதில் மிளகு தூள், கொத்த மல்லி தழை தூவி கிளறி, இறக்கவும். சுவையான கேரளா ஸ்டைல் குழம்பான மீன் மொய்லி ரெடி! இது சாதத்துக்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த குழம்புக்கு வாவல் மீன் அல்லது கிங்பிஷ் மீனைக்் கொண்டு செய்யலாம். தக்காளி துண்டுகளாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.

Whats_app_banner

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.