Remedies For Bright Face: முகத்தை வீட்டில் இருந்தே அழகாக்குங்கள்! இந்த பொருட்கள் போதும்!-how to bright the face with home remedies - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Remedies For Bright Face: முகத்தை வீட்டில் இருந்தே அழகாக்குங்கள்! இந்த பொருட்கள் போதும்!

Remedies For Bright Face: முகத்தை வீட்டில் இருந்தே அழகாக்குங்கள்! இந்த பொருட்கள் போதும்!

Suguna Devi P HT Tamil
Sep 29, 2024 04:54 PM IST

Remedies For Bright Face: முகத்தை பொலிவானதாக மாற்ற பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். பல க்ரீம்களை பூசுவது, கெமிக்கல் நிறைந்த பொருட்களை உபயோகிப்பது என பல தேவையற்ற செயல்களை செய்து வருகிறோம். ஆனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே முகத்தை பொலிவடைய செய்யலாம்.

Remedies For Bright Face: முகத்தை வீட்டில் இருந்தே அழகாக்குங்கள்! இந்த பொருட்கள் போதும்!
Remedies For Bright Face: முகத்தை வீட்டில் இருந்தே அழகாக்குங்கள்! இந்த பொருட்கள் போதும்!

 எலுமிச்சை சாறு மற்றும் தேன்

எலுமிச்சை சாறில்  இயற்கையான ப்ளீச்சிங் தன்மை உள்ளது. இது சருமத்தை வெண்மையாக்குவதற்கான வேலையை செய்கிறது. இதனை தேனுடன் சேர்த்து முகத்தில் போடும் போது சருமத்தை ஒளிரச் செய்வது மட்டுமல்லாமல், ஊட்டமளிக்கும். தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தழும்புகளை குறைக்க உதவும்.

ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தை சுத்தம் செய்த பின் தடவி சுமார் 20 நிமிடங்கள் காய விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.

உருளைக்கிழங்கு சாறு

உருளைக்கிழங்கு சாற்றில் கரும்புள்ளிகள் மற்றும் நிறமிகளை குறைக்கும் என்சைம்கள் உள்ளன. பிரகாசமான நிறத்தை அடைவதற்கான எளிய தீர்வாகும்.

உருளைக்கிழங்கை தோலுரித்து, பின்னர் அதன்  சாற எடுக்கவும். பஞ்சை பயன்படுத்தி முகத்தில் சாறைப் போட வேண்டும். பின்னர் 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும், 

தயிர் மற்றும் தேன் மாஸ்க்

தயிரில் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ளது, இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி ஒளிரச் செய்ய உதவுகிறது. இதனை தேனுடன் கலந்து பயன்படுத்தும் போது, ​​சருமத்தை பிரகாசமாக்கவும்,  ஹைட்ரேட் செய்யவும் உதவுகிறது.

இரண்டு டீஸ்பூன் வெற்று தயிருடன் ஒரு டீஸ்பூன் தேன் கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். குளிர்ந்த நீரில் கழுவவும்.

அரிசி மாவு மற்றும் பால் 

அரிசி மாவு  தோலை பிரகாசமாக்கும் பண்புகளுக்காக பாரம்பரியமாக முக அழகு செயல்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனை பாலுடன் சேர்த்து பயன்படுததும் போது முகத்திற்கு இது ஒரு ஊட்டமளிக்கிறது. மேலும் முகத்தின் இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது.

அரை கப் பச்சை அரிசியை நன்றாக பொடியாக அரைக்கவும். இதில் 3-4 டேபிள்ஸ்பூன் பாலுடன் கலந்து பேஸ்ட்டாக மாற்றவும். இதை முகம் முழுவதும் தடவி, குறைந்தது 30 நிமிடங்கள் காய வைத்து, பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். 

மஞ்சள் மற்றும் பால் 

மஞ்சள் அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இது முகப்பரு வடுக்களை குறைக்கும் அதே வேளையில் முகத்தை பிரகாசமாக்க உதவுகிறது.

ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை இரண்டு டேபிள் ஸ்பூன் பாலுடன் கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே காய வைக்கவும். பினார் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.