Cardamom For Weight Loss: நறுமணம், சுவைக்கு மட்டுமல்ல..! உடல் எடை குறைக்கவும் உதவும் ஏலக்காய் - எப்படி தெரியுமா?
உணவில் நறுமணத்தையும், சுவையையும் அதிகரிக்கும் ஏலக்காய் உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது என்ற சொன்னால் நம்பமுடிகிறதா? எடையை குறைக்க ஏலக்காய் எப்படியெல்லாம் உதவுகிறது என்பதை பார்க்கலாம்.
மசாலா பொருள்களில் ஒன்றாக திகழும் ஏலக்காய் உணவில் உள்ள சுவையை மெருகேற்றவும். நறுமணத்தை அதிகரிக்கவும் செய்கிறது. இதேபோல் பல்வேறு மருத்துவ குணநலன்களையும் கொண்டதாக ஏலக்காய் உள்ளது. இருமல் பிரச்னை இருப்பவர்கள் ஏலக்காயை மென்று அதன் சாற்றை விழுங்கி வந்தால் இருமல் தாக்கமானது சற்று குறையும்.
உடல் ஆரோக்கியத்தை பேனி காக்கும் ஏலக்காயில் குறைவான கலோரிகள், அதிகமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அத்துடன் உடலுக்கு தேவையான வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன.
பல்வேறு நன்மைகள் தரும் ஏலக்காய் உடல் எடை குறைக்கவும் உதவுகிறது. ஏலக்காய் தரும் உடல் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
உடல் நச்சுக்களை நீக்குகிறது
உடலில் தேங்கிய இருக்கும் தேவையற்ற நச்சு பொருள்களை, கொழுப்புகளை நீக்கும் தன்மை ஏலாக்காய்க்கு உள்ளது. இதனால் எடை குறைப்பில் ஈடுபட்டுள்ள உடலின் பிற உறுப்புகளின் செயல்திறனை மேம்படுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் ஏலக்காய், எடை குறைப்புக்கு மிகவும் உதவியாக உள்ளது.
செரிமானத்தை ஊக்குவித்தல்
ஏலக்காய் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை நன்கு உறிஞ்சி, செரிமானத்தை சீராக்குகிறது. இதனால் செரிமான அமைப்பு நன்றாக செயல்பட்டு, வயிறு உப்புசம் ஆவது தடுக்கப்படுகிறது. அத்துடன் வாயு, மலச்சிக்கல் உள்பட வழக்கமான எடை இழப்புக்கு தடையாக இருக்கும் பிரச்னைகளை சரி செய்கிறது.
வளர்சிதை மாற்றத்துக்கு உதவுதல்
உடலின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதன் மூலம் கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிக்க உதவுகிறது, இதன் விளைவாக எடை விரைவாக குறைகிறது
பசியை கட்டுப்படுத்துதல்
ஏலக்காய் எடுத்துக்கொள்வது வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும் உணர்வை தருகிறது. இதனால் வேறு உணவுகளை தேடி மனம் அலைபாயாமல் இருப்பதுடன், தேவையில்லாத உணவுகள் சாப்படுவதும் கட்டுப்படுத்தப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்