தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Honey For Many Benefits, Get Glowing Skin This Wedding Season

Benefits of Honey: முகத்தில் முகப்பரு நீங்கி பளபளபாகத் தேனை இப்டி யூஸ் பண்ணுங்க!

I Jayachandran HT Tamil
Jan 18, 2023 11:33 PM IST

சருமத்துக்கு பொலிவு தந்து பளபளப்பான பலனைத் தரும் தேனின் நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.

தேன்
தேன்

ட்ரெண்டிங் செய்திகள்

குளிர்காலம் வந்தால் சருமம் வறண்டு போகும். பின்னர் இருமல் மற்றும் சளி பிரச்னைகள் உங்கள் உடலை பாதிக்கிறது. இவை அனைத்துக்கும் நல்ல தீர்வை தேன் கொடுக்கலாம்.

குளிர்காலத்தில் சருமத்தில் ஈரப்பதம் குறைவது இயற்கை. தேனை சருமத்தில் தடவி கழுவினால், ஈரப்பதம் தக்கவைக்கப்படும். விலை உயர்ந்த அழகுசாதனப் பொருட்களை விட தேன் சிறப்பாக செயல்படுகிறது.

வயதாகும்போது, ​​தோலில் சுருக்கங்கள் தோன்றும். சரும செல்களை ஆரோக்கியமாக வைத்து இந்த சுருக்கங்களை நீக்க தேன் உதவுகிறது.

தேன் ஒரு உணவு மட்டுமல்ல, பல ஆண்டுகளாக தோல் பராமரிப்புக்காகவும் நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

தோலில் பல சிறிய துளைகள் உள்ளன. நாள் முழுவதும் அந்தத் துளைகளில் தூசி படிகிறது. இதனால் பருக்கள் உண்டாகின்றன.

தேனை தொடர்ந்து தடவினால் இந்த தூசி நீங்கும்.அடிக்கடி முகப்பரு பிரச்னையால் அவதிப்படுபவர்கள், தேனை முகத்தில் தடவி வர சில நாட்களில் முகப்பருக்கள் குணமாகும்.

விசேஷங்களுக்குச் செல்லும்போது மேக்அப் போட்டு போவீர்கள். வீடு திரும்பியதும் மேக்கப்பை நீக்க பலரும் பலவிதமான அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இவற்றுக்குப் பதிலாக தேன் மற்றும் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தினால் நல்ல பலனைப் பெறலாம்.

WhatsApp channel