Hair Growth Drinks: முடி நீளமாக வளர இத குடிங்க! வீட்டிலேயே செய்யக் கூடிய ட்ரிங்க்ஸ்!-homemade health drinks for hair growth - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Hair Growth Drinks: முடி நீளமாக வளர இத குடிங்க! வீட்டிலேயே செய்யக் கூடிய ட்ரிங்க்ஸ்!

Hair Growth Drinks: முடி நீளமாக வளர இத குடிங்க! வீட்டிலேயே செய்யக் கூடிய ட்ரிங்க்ஸ்!

Suguna Devi P HT Tamil
Sep 30, 2024 06:47 PM IST

Hair Growth Drinks: மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களால் உடலின் பல உறுப்புகள் நேரடியாக பாதிப்பு அடைகின்றன. மேலும் இவற்றை சரிசெய்ய ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம் தேவை படுகிறது.

Drinks For Hair Growth: முடி நீளமாக வளர இத குடிங்க! வீட்டிலேயே செய்யக் கூடிய ட்ரிங்க்குகள்!
Drinks For Hair Growth: முடி நீளமாக வளர இத குடிங்க! வீட்டிலேயே செய்யக் கூடிய ட்ரிங்க்குகள்!

முடி நீளமாக வளர்வதற்கு செயற்கை பொருட்களையும், கெமிக்கல் பொருட்களையும் நாடி செல்வது மிகவும் ஆபத்தான செயலாகும். மேலும் இது போன்ற செயற்கை சிகிச்சைகளுக்கு அதிக அளவிலான பொருட் செலவும் அதிகரிக்கிறது. உங்கள் முடியின் அடர்த்தி குறைந்து விட்டால் இனி வெட்ட வேண்டாம். இந்த வீட்டிலேயே செய்யும் ஜூஸ்களை செய்து குடித்து பாருங்கள். நீளமான அடர்த்தியான தலைமுடி வளரும். 

கேரட் சாறு

கேரட் சாறில் உள்ள பீட்டா கரோட்டின் து உடளுக்குத் தேவையான வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இது முடியின் செல் வளர்ச்சிக்கு அவசியம். தினமும் ஒன்று அல்லது 2 டம்ளர் கேரட் சாறு குடிப்பது முடியின் நிறம் மாறுவதைத் தடுக்க உதவும்.

கீரை சாறு

கீரையில் இரும்பு மற்றும் வைட்டமின் பி ஆகியவை நிறைந்துள்ளதன.  இவை இரண்டும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு முக்கியமானவை. உங்கள் உச்சந்தலையில் கீரை சாற்றை வாரத்திற்கு இரண்டு முறை தேய்க்க வேண்டும்.

கற்றாழை சாறு

முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 75 க்கும் மேற்பட்ட சேர்மங்களைக் கொண்டுள்ளது. காற்றாழையை தொடர்ந்து தலையில் நேரடியாக தேய்த்தால் முடியின் அரிப்பு குணமடையும்.  

க்ரீன் டீ

ஆயுர்வேதத்தின் கூற்றுப்படி, கிரீன் டீ சுறுசுறுப்பான பண்புகளைக் கொண்டுள்ளது, இது முடி வேர்கள் வலுவாக வளர உதவும். தினமும் க்ரீன் டீ குடித்து வர முடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும். 

பீட்ரூட் சாறு

முடி வேர்களை வலுப்படுத்த உதவும் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பீட்ரூட்டில் உள்ளன. இவை நேரடியாக முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன. 

புரதசத்து பானம் 

முடி வளர்ச்சிக்கு அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்ட ஒரு புரதம் நிறைந்த பானம். நீங்கள் தயிர், பாதாம் பால் மற்றும் புரத தூள் கொண்ட ஒரு ஜூஸ் குடிக்கலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.