Remedies For Cough: மழைக்காலம் வந்தாச்சு! குழந்தைகளுக்கு வரும் இருமலை தடுக்க சில வழிமுறைகள்!
Remedies For Cough: மழைக்காலமான இந்த மாதங்களில் குழந்தைகளுக்கு அடிக்கடி நோய்த் தொற்று ஏற்படும். இந்த நோய்களை வீட்டில் இருக்கும் மருத்துவ பொருட்களை வைத்தே சரி செய்யலாம்.

மழைக்காலமான இந்த மாதங்களில் குழந்தைகளுக்கு அடிக்கடி நோய்த் தொற்று ஏற்படும். இந்த நோய்களை வீட்டில் இருக்கும் மருத்துவ பொருட்களை வைத்தே சரி செய்யலாம். மேலும் சில வழிமுறைகளை தொடர்ந்து பின் பற்றுவதன் வாயிலாக இருமல், சளி போன்ற தொந்தரவுகளில் இருந்து எளிமையாக விடுபடலாம். இதனை பின்பற்ற குழந்தைகளின் பெற்றோர் முயற்சி எடுக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகள் சில சமயங்களில் இதனை செய்யாமல் தவிர்க்க முயலும். எனவே அவர்களை உடன் இருந்து செய்யுமாறு பெற்றவர்கள் ஊக்குவிக்க வேண்டும். இயல்பாகவே குழந்தைகளுக்கு நோய் எதிறப்புச் சக்தி குறைவாக இருக்கும். இதனை சரிசெய்ய பின் வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.
அதிக தண்ணீர் குடிக்கவும்
குழந்தைகள் அதிக தண்ணீர் குடிக்க ஊக்குவிக்க வேண்டும். எப்போதும் ஹைட்ரேட்டாக இருப்பது குழந்தைகளுக்கு சளியை எதிர்த்துப் போராட உதவும். காஃபின் பொருட்கள் இல்லாத தேநீர், எலுமிச்சை கலந்த சூடான நீர் போன்ற சூடான திரவங்களை குடிப்பது சளியை தளர்த்துவதன் மூலமும், தொண்டை புண்ணை ஆற்றுவதன் மூலமும் இருமலைப் போக்க உதவும்.
ஆவி பிடித்தல்
குழந்தைகளை குளிப்பாட்ட சூடான தண்ணீரை மட்டும் பயன்படுத்தவும். மேலும் அடிக்கடி சுடு தண்ணீர் வைத்து ஆவி பிடிக்க வைக்க வேண்டும்.இது சளியை தளர்த்தவும், நிம்மதியான தூக்கத்தையும் வழங்க ஆதாரமாக உள்ளது.