Chia Seeds: சியா விதைகளை மிஸ் பண்ணிடாதீங்க.. எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா!
சியா விதைகளால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.
இயற்கையாகவே தாவரங்களுக்கு மருத்துவ குணங்கள் உண்டு. சில தாவரங்கள் உயிரையும் கொள்ளும். சில தாவரங்கள் மாண்டு போனவர்களையும் மீட்கும். அந்த அளவிற்கு மனிதனோடு ஒன்றிணைந்து இயற்கை வாழ்ந்து கொண்டிருக்கிறது.
மனிதனுக்கு பல்வேறு நன்மைகளைப் பயக்கக்கூடிய எத்தனையோ உணவுகள் இருக்கின்றது. அதில் ஒன்றுதான் அதீத மருத்துவ குணம் கொண்ட சியா விதைகள். நம் உடலைச் சீராக வைத்துக் கொள்ளச் சத்தான உணவுப் பழக்கம் மிகவும் அவசியமாகும். அப்படி அளவில் சிறியதாக இருந்தாலும் உடலைக் காக்கும் ரகத்தில் மிளகு, சீரகம், சியா விதைகள் உள்ளன.
சியா விதையின் பலன்கள்
சியா விதிகளை காலைப் பொழுதில் உட்கொண்டு வந்தால் நமது உடலுக்கு அதீத ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நம் குடல் மற்றும் செரிமான பகுதிகளுக்குச் சிறந்த சத்தாக விளங்கக்கூடிய நார்ச்சத்து இந்த விதையில் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. செரிமானம் மற்றும் மலக்குடல் செயல்பாடுகளை இந்த சியா விதைகள் இலகுவாக மாற்றுகின்றது. மலச்சிக்கலைப் போக்கும் சிறந்த குணம் கொண்ட அருமருந்தாக சியா விதைகள் விளங்குகிறது.
சியா விதைகளில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் இருக்கின்ற காரணத்தினால் காலைப்பொழுதில் இதை எடுத்துக் கொண்டால் வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் மூலம் அதிக அளவு உணவு எடுத்துக் கொள்ளும் பழக்கம் குறையும். உடலில் கலோரிகள் சேராத காரணத்தினால் உடல் எடை குறையும். தினசரி உடற்பயிற்சி செய்பவர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த விதைகளில் கரையும் தன்மை கொண்ட நார்ச்சத்து இருக்கின்ற காரணத்தினால் ரத்தத்தின் விரைவில் கலந்து உடனே சத்துகள் சேருகின்றன. அதன் காரணமாகச் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளின் தன்மையை இது குறைக்கும் என கூறப்படுகிறது. சியா விதையில் ஒமேகா 3 14 ஃபேட்டி சத்து அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் ரத்த அழுத்தம் மற்றும் அலர்ஜி உள்ளிட்டவை குறையும் என கூறப்படுகிறது. உடலில் கெட்ட கொழுப்பைக் குறைக்கத் தினமும் சியா விதைகள் சாப்பிடலாம்.
சியா விதைகளில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தினமும் நாம் அதை எடுத்துக் கொண்டால் உடலில் சோர்வு மற்றும் கலைப்பு வராது எனக் கூறப்படுகிறது.
இந்த சியா விதைகளை இரவு முழுவதும் தண்ணீர் ஊற வைத்துவிட்டு காலை எழுந்தவுடன் தண்ணீருடன் சேர்த்துப் பருகலாம். குளிர்பானங்களோடு இந்த விதைகளைச் சேர்த்துச் சாப்பிடலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்