Pirandai: இதைச் சாதாரணமா நினைக்காதீங்க - பிரண்டையின் மருத்துவ குணங்கள்!
மருத்துவ குணங்கள் கொண்ட சாதாரண பிரண்டையின் பலன்கள் குறித்து இங்கே காண்போம்.
பழங்கால மருத்துவங்களும், உணவுப் பழக்க முறைகளும் தற்போது அழிந்து வருகின்றன. பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட எத்தனையோ உணவுகள் காணாமல் போய்விட்டன. எத்தனையோ மருத்துவ தாவரங்கள் தற்போது கண்களுக்குத் தெரியாமல் போய்விட்டன.
தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் இளைஞர்களுக்குப் பிரண்டை என்றால் என்னவென்றே தெரியாத சூழ்நிலை இருந்து வருகிறது. பொதுவாகப் பிரண்டை என்பது எல்லா கடைகளிலும் கிடைப்பதற்கான வாய்ப்பு கிடையாது.
இந்தப் பிரண்டையானது மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் முளைக்கக்கூடிய தாவரமாகும். பொட்டல் காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடிய தன்மை கொண்ட தாவரங்களின் இதுவும் ஒன்றாகும்.
இந்தப் பிரண்டையின் வேர் மற்றும் தண்டு பகுதிகள் அதிகப்படியான மருத்துவ குணங்களைக் கொண்டதாகும். இதில் பல்வேறு வகைகள் இருந்தாலும், நான்கு பட்டங்களைக் கொண்ட சாதாரண பிரண்டை திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகமாகக் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
இதையெல்லாம் யார் தேடுவார்கள் என பலருக்கும் கேள்விகளும், ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மணியக்காரன் பட்டி பகுதி மக்கள், இதனை தேடிப் பறிப்பதில் அதிக ஈடுபாட்டுடன் இருந்து வருகின்றனர்.
பிரண்டையில் பல்வேறு வகைகள் உள்ளன, அவை, உருட்டு பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை, சதுர பிரண்டை, களி, தீம் பிரண்டை, புளி பிரண்டை, ஓலைப் பிரண்டை, சிவப்பு பிரண்டை, சாதாரண பிரண்டை ஆகும்.
இந்தப் பிரண்டைக்கு வஜ்ரவல்லி என்ற பெயரும் உள்ளது. இது மருத்துவ குணம் கொண்ட கொடி வகை சேர்ந்த தாவரம் ஆகும்.
பிரண்டையில் இருக்கக்கூடிய மருத்துவ குணங்கள்
- பிரண்டையில் அமிரோன், சிட்டோசிரால், அமைரின், விட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.
- இதன் மூலம் வயிற்று வலி, ஜீரணக் கோளாறுகள், மாதவிடாய் கோளாறுகள், ஆஸ்துமா, இரத்த மூலம் உள்ளிட்ட சிக்கல்கள் தீரும் எனக் கூறப்படுகிறது.
- பிரண்டையைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு, ஞாபக சக்தி, மூளை நரம்புகள் உள்ளிட்டவை பலமாகும் எனக் கூறப்படுகிறது.
- அஜீரணம், பசியின்மை, இரைப்பை அலர்ஜி உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் பிரண்டை துவையல் சிறந்த மருந்தாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
- அதேசமயம் மூலம் மற்றும் குடற்புழு நீக்குவதற்குப் பிரண்டை சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது எனக் கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்