Maharastra Egg Curry : மனம் விரும்பும் மஹாராஷ்ட்ரா முட்டை கறி; சண்டேவை சிறப்பாக்கும் ஸ்பெஷல் மெனு!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Maharastra Egg Curry : மனம் விரும்பும் மஹாராஷ்ட்ரா முட்டை கறி; சண்டேவை சிறப்பாக்கும் ஸ்பெஷல் மெனு!

Maharastra Egg Curry : மனம் விரும்பும் மஹாராஷ்ட்ரா முட்டை கறி; சண்டேவை சிறப்பாக்கும் ஸ்பெஷல் மெனு!

Priyadarshini R HT Tamil
Jun 25, 2023 09:33 AM IST

Maharastra Egg Curry : இந்த மஹாராஷ்ட்ரா முட்டை கறி, சப்பாத்தி, இட்லி, தோசை, சாதம் என எதனுடன் வேண்டுமானாலும் பறிமாறலாம். சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருப்பதால் வழக்கத்தைவிட அதிகளவு சாப்பிட தூண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவாக இது இருக்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆனால் முட்டையை வேகவைத்தோ, ஆம்லேட் செய்தோ, பொரியல் செய்தோ எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஒரே மாதிரியான சுவையில் சாப்பிடும்போது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் போர் அடித்துவிடும். அதனால்தான் இந்த மஹாராஷ்ட்ரா ஸ்டைல் முட்டை கறியை செய்து அசத்துங்கள்.

இந்த முட்டைக்கறிக்கு சுவை கூட்டுவதே புதிதாக அரைத்து எடுக்கப்பட்ட மசாலாக்கள் தான். அதை முட்டையுடன் சேர்த்து சமைக்கும்போது அதன் சுவை, மணம் ஆகியவை நம்மை கவரும் வகையில் இருக்கும் இதற்கு ஸ்பெஷல் மசாலாவும் அரைக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்

முட்டை 4 - 5

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்

மல்லித்தூள் - 1 ஸ்பூன்

எள்ளு - 1 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

ஜாவித்திரி - 1

ஏலக்காய் - 2

வெங்காயம் - 2

இஞ்சி, பூண்டு - தேவையான அளவு

பட்டை, கிராம்பு - சிறிதளவு

துருவிய தேங்காய் - 1 கப்

உப்பு தேவையான அளவு

கொத்தமல்லி இழை உணவை அலங்கரிக்க

முதலில் முட்டையை வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மசாலா அரைக்க

ஒரு ஸ்பூன் எண்ணெயை கடாயில் ஊற்றி, மிதமான தீயில் சூடுபடுத்தி பட்டை ஒரு துண்டு, எள்ளு, வர கொத்தமல்லி, சீரகம், கிராம்பு, ஜாவித்திரி, ஏலக்காய் அனைத்தை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். நன்றாக வாகம் வரும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நன்றாக நறுக்கப்பட்ட வெங்காயம், இஞ்சி, பூண்டு நன்றாக நறுக்கியது அல்லது பேஸ்ட் துளி உப்பு போட்டு வதக்கவும். நல்ல பொன்நிறம் வரும் வரை வதக்கவும். அதில் துருவிய தேங்காய் சேர்த்து அதுவும் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அடுப்பை அணைத்துவிட்டு, இப்போது எள்ளு சேர்த்து வதக்கவும், இவையனைத்தும் வெந்தவுடன், ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

முட்டைகறிக்கு, ஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து நன்றாக கலக்கவும்.

உப்பு தேவையாக அளவை உபயோகப்படுத்தவும். எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் மசாலா தயாராகிவிட்டது என்று பொருள்.

இதில் ஏற்கனவே வேக வைத்த முட்டையை நன்றாக போட்டு கலக்கவும். வேக வைத்து வறுத்த முட்டைகளையும் இதில் சேர்க்கலாம். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும். மசாலாவின் சுவை முட்டையில் நன்றாக ஏறுவதற்காக இதைச்செய்ய வேண்டும். அதிக நீர் மட்டும் சேர்த்துவிடாதீர்கள். ஏனெனில் மசாலா தண்ணீராக இருந்தால் சுவையாக இருக்காது.

மூடி 5 முதல் 10 நிமிடங்கள் வேகவிட்டு, பின்னர் திறந்து நன்றாக ஒரு கலக்கு கலக்கி விடவும், பின்னர் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை தூவி மூடிவைத்துவிடவும்.

இந்த மஹாராஷ்ட்ரா முட்டை கறி, சப்பாத்தி, ரொட்டி, குல்சா, பரோட்டா, இட்லி, தோசை, சாதம் என எதனுடன் வேண்டுமானாலும் பரிமாறலாம். சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருப்பதால் வழக்கத்தைவிட அதிகளவு சாப்பிட தூண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவாக இது இருக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.