Green Moong Dal Bonda: ஹெல்தியான முளை கட்டிய பச்சை பயிறு கீரை போண்டா!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Green Moong Dal Bonda: ஹெல்தியான முளை கட்டிய பச்சை பயிறு கீரை போண்டா!

Green Moong Dal Bonda: ஹெல்தியான முளை கட்டிய பச்சை பயிறு கீரை போண்டா!

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 26, 2023 01:33 PM IST

கீரை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட இந்த போண்டாவை விரும்பி சாப்பிடுவார்கள்.

பாசிப்பருப்பு கீரை போண்டா
பாசிப்பருப்பு கீரை போண்டா

தேவையான பொருட்கள்

முளை கட்டிய பாசி பயிறு

தண்டு கீரை

வெங்காயம்

வத்தல்

சீரகம்

பெருங்காயம்

கறிவேப்பிலை

பூண்டு

உப்பு

மிளகாய் தூள்

கடலை மாவு

அரிசி மாவு

சோடா உப்பு

செய்முறை

பாசிப்பயிறை நன்றாக கழுவி ஊற வைக்க வேண்டும். 6 மணி நேரம் வரை ஊறிய பச்சை பயிறை வெள்ளை துணியில் வைத்து முளை கட்டி வைக்க வேண்டும். பின்னர் முளை கட்டிய பச்சை பயிரை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். 

அதில் பூண்டை ஒன்றிரண்டாக தண்டி சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். 3 பச்சை மிளகாய் அல்லது வத்தலை நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். 

அதில் அரை கட்டு தண்டு கீரையை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். இரண்டு ஸ்பூன் சீரகத்தை கசக்கி சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் பெருங்காய பொடியை சேர்த்து கொள்ள வேண்டும். 

அதில் தேவையான அளவு உப்பு, கொஞ்சமாக மிளகாய் தூளை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதில் கால் கப் கடலை மாவு மற்றும் கால் கப் அரிசி மாவையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். 

போண்டா மாவு பதத்திற்கு வந்த பிறகு எண்ணெய்யை சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பிறகு அதில் போண்டாவை போட வேண்டும். ஒரு பக்கம் வெந்த பிறகு திருப்பி விட்டு வேக விடலாம். பின்னர் போண்டா சிவந்த பிறகு எடுத்து கொள்ள வேண்டும். இப்படியே மீதமுள்ள மாவை போண்டா செய்து எடுத்து விடலாம். அவ்வளவு தான் ருசியான போண்டா ரெடி. தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட இந்த போண்டா ருசியாக இருக்கும். மிதமான தீயில் வைத்து சிவக்க விடவேண்டும். இல்லையென்றல் வெளியில் சிவந்து இருக்கும். உள்ளே மாவு அப்படியே இருந்து விடும். 

கீரை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட இந்த போண்டாவை விரும்பி சாப்பிடுவார்கள். 

பொதுவாக முளை கட்டிய தானியங்களில் சாதாரண தானியங்களை விட 20 மடங்கு அதிக அளவில் ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கும். அந்த வகையில் முளை கட்டிய பாசி பயிறில் விட்டமின் ஏ, பி, காம்ப்ளஸ் விட்டமின் சி மற்றும் ஈ அதிக அளவில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.