தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Healthy Relationship Vs Toxic Relationship How To Build Relationship

ஆரேக்கியமான உறவுகள் மற்றும் நச்சு உறவுகள் - உறவுகளை பலப்படுத்த சில டிப்ஸ்

Priyadarshini R HT Tamil
Feb 04, 2023 01:01 PM IST

Buliding Healthy Relationship: நீங்கள் ஏற்கனவே ஒரு உறவுக்குள் இருக்கிறீர்களா அல்லது புதிதாக ஒரு உறவை பலப்படுத்த விரும்புகிறீர்களா? அதற்கு உங்களுக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ளவை உதவியாக இருக்கும்.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

ஆரோக்கியமான உறவு என்ன செய்யும்? 

உங்களை நீங்களாக அங்கீகரிக்கும். 

உங்கள் பிரச்னைகளை பகிர்ந்துகொள்ளும்போது ஆதரவாகவும், அதற்கு உறுதுணையாகவும் இருக்கும். 

நீங்களாக இருப்பதற்கு அவமானப்பட தேவையிருக்காது. 

உள, உணர்வு ரீதியாக பாதுகாப்பாக உணர்வீர்கள். 

தனித்தன்மையாகவும், அவர்களுக்கான தனிப்பட்ட நேரம் செலவிடுவதையும், அவர்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கும் முக்கியத்துவம் இருக்கும். 

உங்கள் தேவைகள், உணர்வுகள் மற்றும் சிந்தனைகள் அனைத்தும் சுதந்திரமாக இருக்கும். அதை யாரும் மதிப்பிட்டுக்கொண்டே இருக்க மாட்டார்கள். 

ஆதரவும், ஊக்குவிப்பும் இருக்கும். 

அடுத்தவர்களின் எதிர்மறையான சிந்தனைக்கு வித்திடாது. 

பரஸ்பரமான மரியாதை இருக்கும். 

உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

 ஆரோக்கியமற்ற உறவு என்ன செய்யும்? 

உங்களின் உணர்வுகளை அவர்கள் கட்டுப்படுத்துவார்கள், அவர்களை சார்ந்து இருப்பீர்கள். 

உங்களின் பார்ட்னரிடம் எதற்கெடுத்தாலும், அவரின் துணையை நாடுவீர்கள். 

உங்கள் பார்ட்னர் இருந்தால்தான் நீங்கள் முழுமையாக உணர்வீர்கள். உங்களால் தனித்து இயங்க முடியாது. 

தனியாக இருக்க முடியாமல் எப்போது யாரையாவது அனைத்து வேலைகளுக்கும் சார்ந்தே இருப்பீர்கள். 

அவர்கள் அருகில் இல்லாவிட்டால் கூட உங்களால் இருக்க முடியாது. எப்போதும் அவர்களுடன் தொடர்பிலே இருப்பீர்கள்.

உங்கள் உணர்வுகளை உங்களுக்குள்ளே வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பாதிக்கப்படுவீர்கள். 

உங்கள் இருவருக்கும் இடையே இடைவெளிக்கான தேவை இருக்கும். ஏனெனில் உங்களுக்கு நெருக்கம் அச்சத்தை ஏற்படுத்தும்.

எப்போதும் உங்கள் பார்ட்னர் உங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். கருத்துவேறுபாடுகள் அச்சுறுத்தலாக இருக்கும். 

WhatsApp channel

டாபிக்ஸ்