தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Healthy Man How To Keep Private Parts Clean Tips

Healthy Man: ஆண்களின்அந்தரங்க விஷயம் – அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை இதோ..!

HT Tamil Desk HT Tamil
Mar 05, 2023 01:44 PM IST

It's a men thing: ஆரோக்கிய வாழ்வுக்கு ஆண்களின் அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். அதுகுறித்த டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

ஆணுறுப்பு மிகவும் சென்சிடிவ்வானது. எனவே மிகவும் கவனமாகஅவ்விடத்தை சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக ஆண்குறியின் முனையில் தான் அதிக அழுக்குகள்சேரும். மேலும் அவ்விடத்தில் தான் பாக்டீரியாக்கள் அதிகம்உருவாகும். எனவே அவ்விடத்தை மென்மையானசோப்பு கொண்டு தினமும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் ஜிம் சென்றுவிட்டு, வீடிற்குவந்ததும் சுத்தம் செய்ய வேண்டியது முக்கியம். ஏனெனில் உடற்பயிற்சியின்போது அதிகம் வியர்த்திருப்பதால் இதை செய்வது ஆணுறுப்புக்கு சுகாதாரத்திற்கு நல்லது. 

அந்தரங்கபகுதியில் வளரும் முடியை அவ்வப்போது ட்ரிம் அல்லது ஷேவிங் செய்துவிட வேண்டும். ஏனெனில் முடி இருந்தால், அதிகம்வியர்க்கும். எனவே மாதம் ஒரு முறை தவறாமல்ட்ரிம் அல்லது ஷேவிங் செய்ய வேண்டும்.

உடலுறவுகொள்ளும் முன்னும், பின்னும் மறக்காமல் சுத்தம் செய்ய  வேண்டும். இது ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் பொருந்தும். முக்கியமாக உடலுறவுக்கு முன் ஆண்கள் சுத்தம் செய்ய வேண்டியதுஅவசியம். ஏனெனில் ஆண்குறியின் முனையில் இருக்கும் ஒருவித திரவமானது தொற்றுகளை ஏற்படுத்தும்.எனவே தவறாமல் உறவுக்குமுன்னும், பின்னும் வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யுங்கள். 

சுயஇன்பம் காணும் ஆண்கள், அதற்கு பின் கட்டாயம் சுத்தம் செய்ய  வேண்டும். இது அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம்வீசுவதை தவிர்ப்பதோடு பூஞ்சையின் வளர்ச்சியையும் தவிர்க்கலாம்.

ஆண்குறியின்மேல்தோலுக்கு அடியில் சுத்தம் செய்ய வேண்டியது மிகவும்முக்கியம். ஏனெனில் அந்த இடம்தான் பாக்டீரியாக்கள்அதிகம் வளர்வதோடு, சேரவும் செய்யும். முக்கியமாக அந்த இடத்தை சுத்தம் செய்யும்போது கவனமாகஇருக்க வேண்டும்.

அந்தரங்கபகுதியில் காற்றோட்டம் இருக்கும்படி செய்ய வேண்டியது அவசியம். அதற்கு இரவில் படுக்கும் போது உள்ளாடை அணிவதைத்தவிர்க்கவும். இதனால் அப்பகுதியில் வியர்ப்பதை தவிர்பதோடு, துர்நாற்றம் வீசுவதையும் தவிர்க்கலாம்.

ஆணுறைப்பின்முன் பகுதியில் மாவுமாவாக உள்ள ஸ்மெக்மா என்றமாவுப்பொருள் கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இதனை அவ்வப்போது முறையாகசுத்தம் செய்யாவிட்டால், அது ஆண்குறியை சிவக்கச்செய்வதோடு, வீக்கத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் அந்தஸ்மெக்மா ஆணுறுப்பு புற்றுநோயைக்கூட உண்டாக்கும்.

தினமும்குளிக்கும்போது உள்ளாடையை வெறும் நீரில் அலசாமல், சோப் பயன்படுத்தி, சுடு தண்ணீரில் அலசி உலரவைக்க வேண்டும். குறிப்பாக காட்டன் உள்ளாடையைப் பயன்படுத்துவதே சிறந்தது. இதனால் வியர்வையை காட்டன் உறிஞ்சி அவ்விடத்தில் தொற்றுக்கள் ஏற்படுவதை தடுக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு உடலின் அனைத்து பாகங்களையும் சுத்தமாக வைத்திருப்பது மிகமிக அவசியம். 

WhatsApp channel

டாபிக்ஸ்