Benefits Of Sugar Apple: இரத்த சோகை முதல் கண் பார்வை வரை பலன் அளிக்கும் சீதாப்பழம்!-healthy benefits of sugar apple fruit - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Sugar Apple: இரத்த சோகை முதல் கண் பார்வை வரை பலன் அளிக்கும் சீதாப்பழம்!

Benefits Of Sugar Apple: இரத்த சோகை முதல் கண் பார்வை வரை பலன் அளிக்கும் சீதாப்பழம்!

Suguna Devi P HT Tamil
Sep 27, 2024 03:22 PM IST

Benefits Of Sugar Apple: நாம் அன்றாடம் வழக்கமான பழங்களை சாப்பிட்டு வருகிறோம். ஆனால் நாம் கண்டுகொள்ளாத பல பழங்களில் எண்ணிலடங்கா நன்மைகள்உள்ளன.

Benefits Of Sugar Apple: இரத்த சோகை முதல் கண் பார்வை வரை பலன் அளிக்கும் சீதாப்பழம்!
Benefits Of Sugar Apple: இரத்த சோகை முதல் கண் பார்வை வரை பலன் அளிக்கும் சீதாப்பழம்!

முதன் முதலில் சீதாப்பழம் அமெரிக்காவின் வெப்பமண்டல பகுதியில் விளைந்ததாக கூறப்படுகிறது.   இது அனோனா எனும் குடும்பத்தைச் சேர்ந்த தாவர இனமாகும். இது சுமார் எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படும் மரமாக உள்ளது. மேலும் பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

சீதாப்பழத்தின் நன்மைகள் 

நார்ச்சத்து: சீதாப்பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது,. இது செரிமானத்திற்கு உதவுகிறது. குடல் இயக்கத்தை சீராக வைத்திருப்பதன் மூலம் மலச்சிக்கலைத் தடுக்கிறது. 

ஆன்டிஆக்ஸிடன்ட்கள்: இந்த பழத்தில்  ஃபிளாவனாய்டுகள், வைட்டமின் சி, பினாலிக் கலவைகள் மற்றும் கௌரினோயிக் அமிலம் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பெரும்பாலும் நாள்பட்ட நோய்கள் மற்றும் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை கட்டுபடுத்துகிறது. கண்புரை, வயது தொடர்பான மாகுலர் சிதைவு மற்றும் பார்வை இழப்பு ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கும்.  ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து கண்களைப் பாதுகாப்பதற்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பயன்படுகிறது. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பல அழற்சி நிலைகளின் அபாயத்தையும் குறைக்கின்றன, ஏனெனில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் கௌரினோயிக் அமிலம் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.

ஃபிளாவனாய்டுகள்: இப்பழத்தில் உள்ள ஃபிளாவனாய்டுகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகின்றன.  இதனால் புற்றுநோய், குறிப்பாக மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் வயிற்றில் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

வைட்டமின் B6: வைட்டமின் B6 நிறைந்தது, சீதாப்பழத்தின் பல நன்மைகளில் ஒன்று மனநிலையை சீராக்குவது. சோகம் மற்றும் மனச்சோர்விற்கான காரணிகளை குறைத்து புத்துணர்ச்சி அளிக்கிறது. 

பொட்டாசியம் (கே) & மெக்னீசியம் (எம்ஜி):  இரத்த நாளங்களை விரிவடையச் செய்து சீராக செயல்பட உதவுவதன்  மூலம் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துகிறது. சீதாப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை  குறைக்க உதவுகிறது.

சீதாப்பழத்தின் நன்மைகளை அறிந்து இதனை நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் வாயிலாக ஆரோக்கியமான உடலை பெற முடியும். மேலும் உடல் வலிமையை மேம்படுத்தவும் முடியும். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.