அத்திப்பழத்தில் அடங்கியிருக்கும் அதிசய ஆரோக்கிய நன்மைகள்-healthy benefits of figs - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அத்திப்பழத்தில் அடங்கியிருக்கும் அதிசய ஆரோக்கிய நன்மைகள்

அத்திப்பழத்தில் அடங்கியிருக்கும் அதிசய ஆரோக்கிய நன்மைகள்

I Jayachandran HT Tamil
Mar 16, 2023 06:47 PM IST

அத்திப்பழத்தில் அடங்கியிருக்கும் அதிசய ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

அத்திப்பழத்தில் அடங்கியிருக்கும் அதிசய நன்மைகள்
அத்திப்பழத்தில் அடங்கியிருக்கும் அதிசய நன்மைகள்

அத்திப்பழங்கள் மிகவும் சுவையானது.அதேசமயம் ஆரோக்கியமானதும் கூட. அத்தி பழம் இரு வகைப்படும். இவற்றை சீமை அத்தி மற்றும் நாட்டு அத்தை என்று குறிப்பிடுவார்கள். அத்தி பழங்கள் கொத்துக் கொத்தாக மரத்தின் பல்வேறு இடங்களிலும் காய்த்துத் தொங்கும். ஒரே அத்தி மரத்தில் 180 முதல் 300 அத்தி பழங்கள் வரை காய்க்கும்.

இந்த அத்திப்பழங்களைப் பச்சையாகவோ அல்லது உலர வைத்தோ சாப்பிடுவதால் பல நல்ல பயன்கள் கிடைக்கும்.இந்த பழங்களை உலரவைத்துப் பயன்படுத்தும் போது வெகுநாட்கள் வரை வைத்துச் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

அத்தி பழங்களில் என்னென்ன வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன என்று முதலில் பார்க்கலாம்.

வைட்டமின் ஏ

வைட்டமின் சி

வைட்டமின் பி

வைட்டமின் கே

பொட்டாசியம்

மெக்னீசியம்

இரும்புச்சத்து

காப்பர்

ஜிங்க்

மான்கனீஸ்

உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.

அத்தி பழம் தரும் நன்மைகள் என்ன?

வாய் துர்நாற்றம் நீங்கும்

அத்தி பழங்களை சாப்பிடுவதன் மூலம் வாயில் உள்ள கிருமிகள் அளிக்கப்படும். இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கும்.நெடுநாளாக இது மாதிரி தொந்தரவு உள்ளவர்களுக்கு அத்தி பழம் ஒரு நல்ல தீர்வை அளிக்கும்.

கொழுப்பு கிடையாது

அத்தி பழங்களில் கொழுப்புச்சத்து கிடையாது. உடல் எடை குறைய வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இந்த அத்திப்பழங்கள் சிறந்த தேர்வாகும்.மேலும் இந்த பழங்கள் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகின்றன.

நார்ச்சத்து நிறைந்தது

ஒரு அவுன்ஸ் காய்ந்த அத்திப்பழங்களில் 300 கிராம் நார்ச்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்து மலச்சிக்கலைச் சரிப்படுத்த உதவும். அத்திப்பழங்களை சாப்பிட்டால் வயிறு நிறைந்த உணர்வு நெடுநேரம் இருக்கும். குழந்தைகளுக்கு இந்த பழங்களை தருவதன் மூலம் அவர்கள் நாள் முழுவதும் உற்சாகமாகச் செயல்படுவர்.

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்

அத்தி பழங்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள மிகவும் உதவுகின்றது. மேலும் இந்த அத்தி பழங்கள் இன்சுலின் செயல்பாட்டைச் சிறப்பாக மேம்படுத்துகிறது. அத்திப் பழங்கள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் கூறவேண்டும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தின் சர்க்கரை அளவை சரியான முறையில் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.

சருமம் நலம் காக்கும்

எக்சிமா ,சோரியாசிஸ் போன்ற பல்வேறு சரும பிரச்னைகளுக்கு அத்திப்பழம் மருந்தாகச் செயல்படுகின்றது. அத்திப்பழங்ளை எடுத்துக் கொள்வதன் மூலம் தோலில் ஏற்படும் வெண் புள்ளிகள், வெண்குஷ்டம் போன்ற பல பிரச்னைகள் குணமாகும். மேலும் இவற்றை அவ்வப்போது சாப்பிடுவதன் மூலம் சருமம் பொலிவடையும், முகம் பிரகாசமாகும்.

வயதான தோற்றம் ஏற்படாது

அத்தி பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடெண்ட்கள் உடலில் உள்ள கழிவுகளை அகற்றப் பெரிதும் உதவுகின்றன.இந்த செயல்பாட்டால் அத்தி பழத்தைத் தினம் எடுத்துக் கொள்பவருக்கு வயதான தோற்றம் சீக்கிரம் தோன்றாது. இது அத்தி பழத்தின் சிறந்த குணமாகக் குறிப்பிடலாம்.

முடி வளர்ச்சி சிறப்பாக இருக்கும்

அத்தி பழங்களில் நிறைந்துள்ள ஜிங்க் சத்து முடியில் ஏற்பட்டுள்ள பிளவுகளைக் குணப்படுத்த உதவும். குறிப்பாக மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு அதிகமாக முடி உதிர்தல் பிரச்னை இருக்கும். அந்த சமயங்களில் அத்தி பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் முடி கொட்டுதலைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

ரத்த உற்பத்தி அதிகரிக்கும்

அத்தி பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் உடலில் இரத்த உற்பத்தி மேம்படும். ஆக இதன் மூலம் ரத்தசோகை போன்ற வியாதிகள் விரட்டி அடிக்கப்படும்.

கல்லீரல் வீக்கம் குணமாகும்

இந்த பழங்களைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வதன் மூலம் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும். குறிப்பாகக் கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு இருந்தால், அது பூரணமாக நிவாரணம் அடையும்.

பித்த பிரச்னை தீரும்

அத்தி மரத்தின் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து உலர வைக்கவும். இவற்றைக் காயவைத்து பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டு வர பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் குணமடையும்.

ரத்த அழுத்தம் சீராக இருக்கும்

ஆரோக்கியமான வாழ்வுக்கு ரத்த அழுத்தம் சீரான நிலையில் இருக்க வேண்டும். ரத்த அழுத்தம் அதிகமாகும் பட்சத்தில் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். இதற்குத் தீர்வாக அத்தி பழங்கள் உள்ளன. இதில் உள்ள பொட்டாசியம் சத்தானது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகின்றது.

புற்றுநோய் வராது

இன்று அத்தி பழங்களை குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆய்வுகளின் மூலம் கிடைக்கப் பெற்றவரோ முத்தாய்ப்பான தகவல் தான் இந்த விஷயம். அதாவது அத்தி பழங்களை சாப்பிட அவர்களுக்குப் புற்றுநோய் அபாயம் கிடையாது. குறிப்பாகப் பெண்களுக்கு மார்பக புற்று நோய் வராது.

தலைமுடி வளர்ச்சி சிறப்படையும்

அத்தி பழத்தில் நிறைந்துள்ள விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ சத்து மூடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமானது. இதில் உள்ள மெக்னீசியம் சத்து தலைமுடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும். அத்தி பழங்களைச் சாப்பிடுவோருக்கு முடியின் நீளம் அதிகரிக்கும் என்பது உறுதி.

கண்பார்வை சிறக்கும்

அத்தி பழங்களில் கண்களுக்கு அவசியமான விட்டமின் ஏ ,நிக்கோடினிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் அதிகளவு காணப்படுகின்றது. இவற்றைச் சாப்பிடுவதன் மூலம் கண் வளம் மேம்படும். குறிப்பாகக் குழந்தைகளின் கண் பார்வை சிறப்பாக இருக்க அவர்களுக்கு இந்த பழங்களைத் தினமும் சாப்பிடத் தருவது மிகவும் நல்லது.

எலும்புகள் பலமடையும்

இந்த பழங்களில் கால்சியம் சத்து உள்ளது.ஆக அத்தி பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் பலமடையும். மூட்டு வலி ,எலும்பு தேய்மானம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குணமடையும்.

நல்ல தூக்கம் கிடைக்கும்

அத்தி பழத்தில் விட்டமின் பி ,சி நிறைந்துள்ளன. ஆக இந்த பழத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனை தீரும்.மேலும் இதில் உள்ள ட்ரிப்டோபன் என்னும் வேதிப் பொருள் தூக்கத்தை தூண்டும் தன்மை கொண்டது. இன்சோம்னியா போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அத்திப்பழம் அருமருந்தாகும்.

மூச்சுக்குழாய் அலர்ஜி குணமாகும்

அத்திப் பழங்கள் சாப்பிடுவதன் மூலம் மூச்சு குழாயில் உள்ள அசுத்தங்கள் குணமாகும். மேலும் இவை மூச்சுக்குழாய் ஆரோக்கியமாக இருக்க வழி வகுக்கும்.

நீர்ச்சத்து தக்க வைக்கப்படும்

அத்தி பழங்களில் நல்ல அளவு நீர்ச் சத்து உள்ளது. ஆக இந்த பழங்களைத் தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலில் நீர்ச்சத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

இதயம் சிறப்பாகச் செயல்படும்

இதய பிரச்னைகள் உள்ளவர்களுக்கு அத்திப்பழம் ஏற்றது. அத்திப் பழம் ரத்தத்தைச் சுத்திகரிக்கப் பெரிதும் வழிவகுக்கும். மேலும் இரத்த ஓட்டம் சீராக நடைபெற அத்தி பழம் உதவும். அந்த வகையில் இதய வியாதி உள்ளவர்களுக்கு அத்தி பழம் பல நன்மைகளைப் பயக்கும்.

இதைத் தவிர மேலும் அத்தி பழங்கள் செய்யும் பலன்கள்-

உடல் வீக்கம் குறையும்.

நீர்க் கட்டிகள் இருந்தால் சரியாகும்.

வாய்ப் புண் குணமடையும்.

ஆஸ்துமா பிரச்னை தீர உதவும்.

உடல் சோர்வு தீரும்.

வலிப்பு நோய்க்குச் சிறந்த மருந்து.

மூலநோய் குணமாகும்.

ஏன் அத்தி பழங்கள் பெரும்பாலும் உலர வைத்துச் சாப்பிடப்படுகின்றன?

அத்தி பழங்கள் நல்ல மணத்துடன் இருக்கும். இருப்பினும் இந்த பழங்களை அறுத்துப் பார்த்தால், அதற்குள் மெல்லிய பூச்சிகள் மற்றும் புழுக்கள் தென்படும். அதனால் பெரும்பாலும் அத்தி பழங்கள் அப்படியே சாப்பிடப்படுவதில்லை. ஆகவே தான் இந்த பழங்கள் உலர வைக்கப்பட்ட பின்னர் சாப்பிடப்படுகின்றன.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.