Health Care : அடிக்கடி கொட்டாவி; முதுகு வலி வருகிறதா.. அலட்சியம் வேண்டாம்.. இந்தக் குறைபாடுகளே காரணம்!
Health Care : நீங்கள் அடிக்கடி கொட்டாவி விட்டாலோ அல்லது சளி மற்றும் தசைப்பிடிப்புடன் இருப்பாலோ இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். கால்கள் மற்றும் கைகளில் கூச்சம் அல்லது தசைப்பிடிப்பு அறிகுறிகள் வைட்டமின் பி12 குறைபாட்டைக் குறிக்கும். இடுப்பில் வலி, கால்கள், கைகள், மூட்டுகளில் வலி ஏற்படுகிறது,

Health Care : நம் உடல் ஆரோக்கியமாக இருக்க பல வகையான முக்கியமான ஊட்டச்சத்துக்கள் தேவை. அவற்றில் ஏதேனும் குறைவாக இருந்தால் கூட உடல் உடனடியாக எதிர்வினையாற்றுகிறது. ஆனால் பல நேரங்களில் நாம் பிரச்சினைகளை கவனிக்க தவறி விடுகிறோம் என்பது தான் உண்மை. மற்றும் உடலின் இந்த எதிர்வினைகளைப் புரிந்துகொள்வதில் தாமதம் செய்கிறோம். இதனால் உடலுக்குத் தேவையான ஊட்டசத்து பொருட்கள் கிடைக்காமல் நோய்கள் உருவாக காரணமாக அமைந்து விடுகிறது . நீங்கள் அடிக்கடி கொட்டாவி விட்டாலோ அல்லது சளி மற்றும் தசைப்பிடிப்புடன் இருப்பாலோ இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். அவை என்னென்ன பிரச்சனைகளைக் குறிக்கின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அடிக்கடி கொட்டாவி வருதல்:
தூக்கமின்மை மற்றும் நன்றாகவே நாம் தூங்கும் போது கூட கொட்டாவி வரும். தூக்கமின்மையால் நீங்கள் சற்று மந்தமாக உணர்ந்தால், நாள் முழுவதும் கொட்டாவி விடுவீர்கள். ஆனால் நீங்கள் தினமும் மிகவும் சோர்வாகவும், பலவீனமாகவும் உணர்ந்தால்.. நீங்கள் எப்போதும் கொட்டாவி விட்டுக் கொண்டே இருந்தால், இவை உடலில் இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
வலிகள்:
கைகள் மற்றும் கால்களின் தசைகள் தொடர்ந்து வலிக்கிறது என்றால், புறக்கணிப்பு பயனற்றது. சிறிய வேலை செய்தால் கூட வேலை முடிந்த பிறகு உடனடியாக வலியை உணர்ந்தால், அது மெக்னீசியம் குறைபாட்டைக் குறிக்கலாம். மெக்னீசியம் குறைபாடு அடிக்கடி உடலில் நாள்பட்ட வலியை ஏற்படுத்துகிறது. தசைகள் வலிக்கிறது.