Dry Grapes: உலர் திராட்சையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Dry Grapes: உலர் திராட்சையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Dry Grapes: உலர் திராட்சையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Feb 23, 2024 08:10 PM IST

Benefits Of Dry Grapes : உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அதை தினமும் நீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி அறிவோம்.

உலர் திராட்சை
உலர் திராட்சை

உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

  • உலர் திராட்சை இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கவும் உதவுகிறது.
  • கருப்பு நிற திராட்சையில் கொலஸ்ட்ரால் கிடையாது. எனவே, அதை கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.
  • மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் உலர் திராட்சையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பின்னர் திராட்சையை மசித்து சிறிது தேன் கலந்து சாப்பிடலாம்.
  • ரத்த சோகை நோய் உள்ளவர்கள் தினமும் உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடும் போது ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.
  • உலர் திராட்சையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் பற்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.
  • மஞ்சள் காமாலை நோயுள்ளவர்கள் தினமும் உலர் திராட்சை சாப்பிட்டுவர காமாலை நோய் விரைவில் குணமாகும்.
  • உலர் திராட்சை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.
  • சிறுநீரகப் பாதையில் ஏதாவது நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் காலையில் வெறும் வயிற்றில் நீரில் ஊறவைத்த உலர் திராட்சையுடன் தண்ணீரை அருந்த வேண்டும்.
  • மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்றுப் பிடிப்பு மற்றும் அதிப்படியான இரத்தப் போக்கினால் கஷ்டப்படுவார்கள். அவர்கள், தினமும் ஊற வைத்த உலர் திராட்சையை நீருடன் எடுத்து வந்தால், மாதவிடாய் பிரச்னைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.
  • உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் ஒரு லிட்டர் நீரில் 20-25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி அதன் பின்னர் நாள் முழுவதும் அந்த தண்ணீரைக் குடித்தும், உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால் உடல் வெப்பம் தணியும்.
  • எலும்பு தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யவும் எலும்புகளை வலுப்படுத்தவும் உலர் திராட்சை நல்ல தீர்வாக இருக்கும்.
  • மஞ்சள் காமாலை நோயுள்ளவர்கள் தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டுவர காமாலை நோய் குணமாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.