Mango Health Benefits: உணவு சாப்பிட்ட பின் மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!
உணவு சாப்பிட்ட பின் மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
கனிகளில் தலைசிறந்தவை முக்கனிகள் எனப்படும் மா, பலா, வாழை. இதில் மாம்பழம் பழங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இதை உணவுக்குப் பிறகு சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்
பழங்களின் அரசனான மாம்பழத்தை கோடைக்காலத்தில் அனைவரும் இதை மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள். மாம்பழம் மற்றும் மாம்பழத்தில் தயாரிக்கப்படும் பானங்கள் கோடை காலத்தில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். கோடைக்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மதிய உணவுக்குப் பிறகு மாம்பழம் உண்ணப்படுகிறது. இதில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இருப்பினும் இதை சாப்பிடுவது தொடர்பான சில விதிகள் பின்பற்றப்படுகிறது.
மாம்பழம் செரிமானத்துக்கு மிகவும் நல்லது, ஆனால் அதிகப்படியான மாம்பழம் உட்கொள்வது மற்றும் தவறான நேரத்தில் சாப்பிடுவது நமக்கு தீங்கு விளைவிக்கும்.
கோடைக்காலத்தில் பெரும்பாலான வீடுகளில் மதிய உணவுக்குப் பிறகு மாம்பழம் சாப்பிடுவது ஏன் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதற்கான காரணம் என்ன? இது குறித்து டயட்டீஷியன் சூர்யா மாணிக்கவேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
உணவுக்குப் பிறகு மாம்பழம் சாப்பிடுவதற்கான காரணம்
அமிலேஸ், புரோட்டீஸ் மற்றும் லிபேஸ் போன்ற செரிமான நொதிகள் மாம்பழத்தில் காணப்படுகின்றன. இந்த நொதிகள் நம் உணவில் இருக்கும் கார்ப்ஸ், புரதங்கள் மற்றும் கொழுப்புகளை உடைத்து, வயிற்று உப்புசம், வாயு போன்ற செரிமான பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலை தடுக்கிறது. இது ரத்த சர்க்கரை அளவையும் சீராக்க உதவுகிறது. இருப்பினும், மாம்பழத்தை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும், போதுமான அளவில் மாம்பழம் உட்கொள்வது நல்லது.
மாம்பழத்தின் நன்மைகள்
மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் C இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
செரிமான அமைப்புக்கும் மிகவும் நல்லது.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்
மாம்பழத்தில் பல வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால் ஆரோக்கியத்திற்கு நல்லது
தோல் மற்றும் கண்களுக்கும் மாம்பழம் நல்லது.
மாம்பழத்தின் பலன்கள்
மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார் சத்து மிகுந்திருப்பதால், அது உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.
கர்ப்பிணிகள் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல ஊட்டத்தோடு பிறக்கும். பெண்களின் மாதவிடாய் பிரச்சினைக்கும் மாம்பழம் சாப்பிடுவது நல்லது. நல்ல கனிந்த மாம்பழங்களை சாப்பிட்டால் மாதவிடாய் ஒழுங்குப்படும். அதேசமயம் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் காலை நேரத்தில் சாப்பிட்டால் உதிரப்போக்கு அதிகரிக்கும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.
மாம்பழம் பல் நோய்களையும் போக்கும். பழத்தை துண்டு துண்டாக நறுக்கி வாயில் போட்டு ஈறுகளில் படும்படி வைத்திருந்து 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து துப்பிவிட்டால் பல்நோய் பறந்துவிடும்.
சிறுநீர் பையில் உள்ள கற்களைப் படிப்படியாகக் கரைக்கும் ஆற்றலும் மாம்பழத்திற்கு உண்டு. இரவில் மாம்பழம் சாப்பிட்டு விட்டுத் தூங்கினால் அடுத்த நாள் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்.
டாபிக்ஸ்