தினமும் வாழைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
வாழைக்காய் சாப்பிட்டால் வாயு தொல்லை ஏற்படும் என பலரும் ஒதுக்கிவிடுவதுண்டு. ஆனால் அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துகள் பற்றி தெரிந்துகொண்டால் நிச்சயம் அன்றாட உணவில் ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை என உணர்வீர்கள்.
<p>வாழக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகள்</p>
வாழைக்காயில் பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் பி6 மற்றும் சி ஆகியவை நிறைந்துள்ளன. இதுமட்டுமில்லாமல் அதிகளவில் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.
இதிலுள்ள பொட்டாசியம் உங்களது சிறுநீரகத்துக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. அத்தோடு ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
வாழைக்காயை வேக வைத்து ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து சாப்பிட்டால் செரிமான அமைப்பு சீராகிறது.
இதில் குறைந்த டயட் அளவுகள் கொண்ட நார்ச்சத்தி நிரம்பியிருப்பதால் வயிறு நிரம்பிய உணர்வை உண்டாக்குகிறது. இதனால் அதிகம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் கட்டுப்படுத்தப்பட்டு, உடல் எடை அதிகரிக்க செய்யாமல் பார்த்துக்கொள்கிறது.
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.