Salt Tea Benefits: ஒரு ஸ்பூன் உப்பு போட்டு டீ குடித்தால் என்னவெல்லாம் செய்யுது பாருங்களேன்..!
டீயில் ஒரு ஸ்பூன் உப்பு கலந்து குடிக்கும் போது பலவிதமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறதாம். அந்த நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
உலகில் தண்ணீருக்கு அடுத்து பெரும்பாலானோர் அருந்தும் பானமாக தேநீர் எனும் டீ உள்ளது. உள்ளூர் தொடங்கி உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற பானம் இது. தேநீர் என்பது நம் வாழ்க்கை முறையின் பிரிக்க முடியாத பானமாகும்.
சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பு மக்களும் காலை, மாலை, பகல், இரவு என நான்கு நேரமும் தங்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் எனர்ஜி டானிக் தான் தேநீர். ஒரு நாளைக்கு 5 அல்லது 6 தடவைக்கு மேல் தேநீர் குடிப்பவர்களும் உண்டு. உலகலாவிய பானமாக கருதப்படும் தேநீரின் பிறப்பிடம் தென்கிழக்கு ஆசியா என்கின்றனர். ஆனால், இந்தியா, பர்மா, சீனாவில் தான் தேயிலையானது அடையாளம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பால் கலந்து குடிப்பது, சர்க்கரை சேர்ப்பது, சர்க்கரை சேர்க்காமல் தேயிலையை மட்டும் கொதிக்க வைத்து குடிப்பது, குளுகுளுவென கூலாக குடிப்பது என பல வகையில் இன்றைக்கு தேநீர் தயார் செய்து குடிக்கப்பட்டு வருகிறது. மேலும் இஞ்சி டீ, க்ரீன் டீ, ப்ளாக் டீ, புதினா டீ, லெமன் டீ, மூலிகை டீ போன்ற பல வகைகளிலும் டீ கிடைக்கிறது.
பொதுவாக டீயில் சுவைக்காக சர்க்கரை சேர்த்து குடிப்பது தான் பலரது பழக்கம். ஆனால் டீயில் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து குடித்தால், உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
- சிறிதளவு உப்பு சேர்த்து டீ குடிக்கும் போது, அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது. இதனால் அடிக்கடி நோய்வாய்ப்படுவது தடுக்கப்படும்.
- தேனீரில் சிறிது உப்பு சேர்த்து குடிப்பதன் மூலம் உடலின் ஆற்றல் அதிகரிப்பதோடு, நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இயங்கும் என்பது நிபுணர்களின் கருத்து.
- உப்பு கலந்த டீ செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ளும் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும்.
- உப்பு கலந்த டீயை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், ஒற்றைத் தலைவலி பிரச்னை தடுக்கப்படுவதோடு உடல் மற்றும் மனம் ரிலாக்ஸாக இருக்கும்.
- லெமன் டீயில் கருப்பு உப்பு கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும்.
- பால் சேர்க்காத பிளாக் டீயில் கருப்பு உப்பு கலந்து குடித்தால் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக இது எடை இழப்பை துரிதப்படுத்தும்.
- க்ரீன் டீயை கருப்பு உப்பு சேர்த்து குடிப்பதால், அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் போன்ற வயிற்று பிரச்னைகளை குறைக்கலாம்.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்