நரைக்கத் துவங்கும் தலைமுடி; வருந்தவேண்டாம்; இந்த 10 வழிகளை ஃபாலோ பண்ணுங்க; ரிசல்ட்ட பாருங்க!
தலைமுடி நரைக்காமல் இருக்க சில டிப்ஸ்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
உங்கள் தலைமுடி நரைக்க துவங்கிவிட்டதே என்ற கவலையா? எனில் வருந்தவேண்டாம். இந்த குறிப்புக்களை பின்பற்றினாலே போதும். உங்களுக்கு பலன் கிட்டும். நரை என்பது வயோதிகத்தில் இயற்கையான அறிகுறியாகும். நீங்கள் சில டிப்ஸ்களை பின்பற்றினாலே போதும். உங்களின் தலைமுடி நரைக்காது அல்லது உங்களுக்கு நரைக்கும் காலத்தை தாமதப்படுத்தும். உங்கள் தலைமுடி நரைக்காமல் இருக்க நீங்கள் பின்பற்றவேண்டிய 10 குறிப்புகள் என்னவென்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
சரிவிகித உணவு
உங்கள் உணவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியம். அதில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருக்கவேண்டும். இது உங்களுக்கு ஆரோக்கியமான தலைமுடி வளர உதவுகிறது. இது உங்களின் ஒட்டுமொத்த தலைமுடி ஆரோக்கியம் மற்றும் நிறம் இரண்டுக்கும் உதவுகிறது.
புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்
உங்களுக்கு தலைமுடி நரைப்பதுடன் புகைப்பிடிக்கும் பழக்கம் தொடர்புடையது. எனவே புகைப்பிடிப்பதை தவிர்ப்பது அல்லது விட்டுவிடுவது நல்லது. புகைபிடிப்பது உங்களுக்கு தலைமுடி நரைக்கும் பிரச்னையை அதிகரிக்கும். எனவே அவை தவிர்த்தால் நரைப்பது தாமதமாகும்.
மனஅழுத்த மேலாண்மை
நாள்பட்ட மனஅழுத்தம் உங்களுக்கு இளநரையை ஏற்படுத்தும் முக்கிய காரணியாகும். எனவே உங்களின் மனதை அமைதிப்படுத்தும் விஷயங்களைக் கொண்டு உங்களை அமைதியாக வைத்துக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். உடற்பயிற்சி அல்லது மற்ற மனஅழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
ஆரோக்கியமான தலைமுடி வேர்க்கால்கள்
உங்கள் தலைமுடியின் வேர்க்கால்கள் சுத்தமாக இருக்கவேண்டும். அது ஊட்டச்சத்துடன் இருக்கவேண்டும். உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களை அடிக்கடி சுத்தம் செய்வதை வழக்கமாகக் கொள்ளுங்கள். அதற்கு மிருதுவான ஷாம்பூக்களைப் பயன்படுத்துங்கள். உங்கள் தலைமுடிக்கு ஏற்ற கன்டிஷ்னர்களைப் பயன்படுத்துங்கள்.
புறஊதாக் கதிர்களிடம் இருந்து உங்கள் தலைமுடியை காத்துக்கொள்ளுங்கள்
சூரியனின் அதிகப்படியான புறஊதாக் கதிர்களின் ஒளி உங்கள் தலைமுடியின் பட்டால், அது தலைமுடியின் வேர்க்கால்களை சேதப்படுத்தும். இதனால் உங்களின் தலைமுடி நரைக்கும். உங்கள் தலையில் தொப்பி அணிவது அல்லது தலைமுடியைக் புறஊதாக்கதிர்களிடம் இருந்து காக்கும் பாதுகாப்புக் கவசம் அணிவதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
தலைமுடிக்கு கடுமையான சிகிச்சைகள்
தலைமுடியில் அடிக்கடி கடும் பக்கவிளைவுகளைத் தரும் ஷாம்பூக்களை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். ஹேர் டைகள், ப்ளீச்கள் உள்ளிட்டவை உங்கள் தலைமுடியை சேதப்படுத்தி, உங்களின் தலைமுடி நரைக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். எனவே அதுபோன்ற சிகிச்சைகளை குறைத்துக்கொள்ளுங்கள்.
இயற்கை தீர்வுகளை பயன்படுத்துங்கள்
சில இயற்கை தீர்வுகள், நெல்லி எண்ணெய் அல்லது பேஸ்ட் பூசுவது, தேங்காய் எண்ணெய், தலைமுடியின் வேர்க்கால்களுக்கு வெங்காயச் சாறு பூசுவது என பாரம்பரியமாக தலைமுடி நரையைத் தடுக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றலாம். இது உங்கள் தலைமுடியை நரைப்பதை தாமதப்படுத்தும். இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் குறைவு.
போதிய உறக்கம்
போதிய உறக்கம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. அது தலைமுடி ஆரோக்கியத்துக்கும் சேர்த்துதான். எனவே தினமும் கட்டாயம் 7 முதல் 8 மணி நேரம் வரை உறங்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துங்கள். இதனால் உங்கள் உடல் இயற்கை முறையில் புத்துணர்வு பெறும். அது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.
மாத்திரைகள்
மாத்திரைகள் என்றால், கெமிக்கல் மாத்திரைகள் அல்ல, சப்ளிமென்ட்கள், உங்கள் மருத்துவர் உங்கள் உடல் நலனை பராமரிக்கக் கொடுக்கும் சப்ளிமென்ட்களை சாப்பிட தயாராகுங்கள். வைட்டமின் பி12, பயோடின் போன்ற சப்ளிமென்ட்கள் உங்கள் தலைமுடி ஆரோக்கியத்துக்கு சிறந்தது. மேலும் உங்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தாது. எனவே இதை பின்பற்றுங்கள். ஆனால் இதனால் அனைவருக்கும் பலன் 100 சதவீதம் கிடைக்கும் என்று கூற முடியாது. எனவே நீங்கள் பயன்படுத்தி பலன் கிடைத்தால் தொடருங்கள்.
இயற்கை
இயற்கை அழகுதான் அழகு. எனவே நரைத்தல் என்பது இயற்கையின் அங்கம்தான். எனவே அதை கொண்டாடி வரவேற்பது நல்லது. இதனால் உங்களுக்கு வயோதிகம் குறித்த நேர்மறை எண்ணங்கள்தான் தோன்றும். உங்களின் இயற்கை அழகு உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இதனால் உங்களுக்கு நல்ல தலைமுடி உள்ளது என்ற தன்னம்பிக்கை ஏற்படும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்