Grow With Dogs: நாய் வளர்ப்பதால் குறையும் நோய் ஆபத்து! ஆய்வு சொல்வது என்ன?
Grow With Dogs: டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின்படி நாய்களுடன் வளர்வது சிறந்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் சில நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. இருப்பினும் சிலருக்கு இதில் எந்த வித நாட்டமும் இல்லை. ஏனெனில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் போது அதில் பல சிக்கல்கள் உள்ளன. அதனை பாராமரிப்பதும், பாதுகாப்பாக வைத்திருப்பதும் மிகவும் பொறுப்பான செயலாகும். சிலர் இதனை விரும்புவதில்லை. ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வில் நாய் வளர்ப்பதில் உள்ள நற்பலன்களை விவரித்துள்ளது. டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின்படி நாய்களுடன் வளர்வது சிறந்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் சில நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
நாய்கள் 'மனிதனின் சிறந்த நண்பன்' என காலம் காலமாக கூறப்பட்டு வாரப்படுகிறது. இந்த நன்றி அதிகம் உள்ள தோழர்கள் தங்கள் வால்கள் மற்றும் முட்டாள்தனமான செயல்களால் நம் நாட்களை மகிழ்ச்சியாக மாற்றுகிறார்கள். ஆனால் நாயுடன் வளர்வது உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? டொராண்டோ பல்கலைக்கழகம் மற்றும் சினாய் ஹெல்த் ஆகியவற்றின் ஆய்வு நாய் வளர்ப்பதில் இருக்கும் முக்கியமான ஆரோக்கிய பலன்களை ஆராய்ந்து வெளியிட்டுள்ளது. குழந்தை பருவத்தில் நாய்களுடன் நேரத்தை செலவிடுவது ஆரோக்கியமான குடல் மற்றும் கிரோன் எனும் கூடல் அழற்சி நோயை உருவாக்கும் அபாயத்தை குறைப்பதாக தெரியவந்துள்ளது.
கிரோன் நோய்
கிரோன் நோய் என்பது இரைப்பைக் குழாயில் ஏற்படும் வீக்கத்தால் உண்டாகும் கடுமையான குடல் அழற்சி நிலையாகும். இது காலப்போக்கில் குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. இந்த நோய் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும் என்பதால், ஆரம்பகால கட்டத்திலேயே கண்டறிவதன் அவசியத்தை ஆராய்ச்சியாளர்கள் முக்கியம் என வலியுறுத்துகின்றனர். இந்த நோய் ஏற்படுவதற்கான ஆதாரத்தை கண்டறிந்து அதனை தவிர்க்க பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பதை ஆராய்ச்சியாளர்களின் முதன்மை கருத்து ஆகும். மேலும் இந்த நோய் வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடிய சுற்றுச்சூழல் காரணிகளில் கவனம் செலுத்த வேண்டும். அதனை மட்டுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.