Green Tea : அடிக்கடி கிரீன் டீ குடிப்பவரா? ஆபத்து! அதிகம் குடிப்பதால் இத்தனை பிரச்னைகளா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Green Tea : அடிக்கடி கிரீன் டீ குடிப்பவரா? ஆபத்து! அதிகம் குடிப்பதால் இத்தனை பிரச்னைகளா?

Green Tea : அடிக்கடி கிரீன் டீ குடிப்பவரா? ஆபத்து! அதிகம் குடிப்பதால் இத்தனை பிரச்னைகளா?

Priyadarshini R HT Tamil
Sep 16, 2023 01:00 PM IST

அதிகம் கரீன் டீ உடலுக்கு ஏன் ஆபத்து?

Green Tea - அடிக்கடி கிரீன் டீ குடிப்பவரா? ஆபத்து! அதிகம் குடிப்பதால் இத்தனை பிரச்னைகளா?
Green Tea - அடிக்கடி கிரீன் டீ குடிப்பவரா? ஆபத்து! அதிகம் குடிப்பதால் இத்தனை பிரச்னைகளா?

கிரீன் டீயின் பக்கவிளைவுகள்

கிரீன் டீயில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் அதை அதிகம் குடித்தால், அது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதுடன், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. மனித உடலுக்கு அதிகமான கிரீன் டீ ஏற்படுத்தும் ஆபத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள்.

வயிற்று வலி

அதிகளவில் நீங்கள் கிரீன் டீ குடித்தால் அது உங்கள் வயிற்றில் வலியை ஏற்படுத்துகிறது. வயிற்றில் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. கிரீன் டீயில் டேனின்கள் உள்ளது. அது வயிற்றில் அமிலச்சுரப்பை அதிகரிக்கிறது.

தலைவலி

தலைவலியால் பாதிக்கப்படும் நபர்கள், அதிகளவில் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதில் உள்ள கெஃபைன் தலைவலியை ஏற்படுத்துகிறது.

தூக்கிமின்மை

இதில் குறைவான அளவே கெஃபைன்கள் இருந்தாலும், அதிகம் குடிக்கும்போது அது தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது. அது பின்னர் மற்ற உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.

இரும்புச்சத்து குறைபாடு

ஆய்வுகளின் அடிப்படையில் பார்த்தால், கிரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. அது உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை தடுத்து, இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது. எனவே கிரீன் டீயில் எலுமிச்சை சேர்த்து பருகவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்து, இரும்புச்சத்து உறிஞ்சுவதை ஊக்குவிக்கிறது.

வாந்தி

அதிகளவில் கிரீன் டீ குடிப்பது வாந்தி மற்றும் மயக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அதில் டேனின்கள் அதற்கு காரணமாகின்றன.

அன்றாடம் இயங்குவதில் குறைபாடு

கிரீன் டீயில் உள்ள கெஃபைன், அதிகளவில் எடுத்துக்கொள்ளும்போது, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை குறைக்கிறது. இதனால், இயங்குவதில் கோளாறு ஏற்படுகிறது.

கல்லீரல் பிரச்னைகள்

அதிகளவில் கிரீன் டீ குடிக்கும்போது, அதிகம் கெஃபைன் உள்ளே சென்று கல்லீரலுக்கு அழுத்தம் கொடுத்து கல்லீரலை சேதப்படுத்துகிறது.

எலும்புகளில் வலுவின்மை

கிரீன் டீயில் உள்ள பொருட்கள் கால்சியம் உறிஞ்சுவதையும் தடுத்து, எலும்புகளில் இழப்பை ஏற்படுத்துகிறது. இதனால் எலும்பு நோய்களும் ஏற்படுகிறது. அவை எலும்புப்புரை நோய்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கர்ப்ப காலத்தில் ஏற்றதல்ல

கெபைஃன்கள், டானின்கள் மற்றும் க்ரீன் டியில் உள்ள கேட்சின்கள் கர்ப்பிணிகளுக்கு நல்லது கிடையாது. இதனால் கர்ப்பகாலத்தில் அவர்கள் கிரீன் டீயை தவிர்க்க வேண்டும். இவற்றால் ஆபத்து ஏற்படுகிறது. எனவே கிரீன் டியையும் அளவாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.