Gardening Tips : ‘சீரான தோட்டம் சிறப்பான தோட்டம்’ வீட்டு கார்டனில் காய்கறிகள், பழங்கள் நடவேண்டுமா? இதோ டிப்ஸ்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Gardening Tips : ‘சீரான தோட்டம் சிறப்பான தோட்டம்’ வீட்டு கார்டனில் காய்கறிகள், பழங்கள் நடவேண்டுமா? இதோ டிப்ஸ்!

Gardening Tips : ‘சீரான தோட்டம் சிறப்பான தோட்டம்’ வீட்டு கார்டனில் காய்கறிகள், பழங்கள் நடவேண்டுமா? இதோ டிப்ஸ்!

Priyadarshini R HT Tamil
Oct 04, 2024 07:00 AM IST

Gardening Tips : ‘சீரான தோட்டம் சிறப்பான தோட்டம்’ வீட்டு கார்டனில் காய்கறிகள், பழங்கள் நடவேண்டுமா? இதோ அதற்கு தேவையான குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

 Gardening Tips : ‘சீரான தோட்டம் சிறப்பான தோட்டம்’ வீட்டு கார்டனில் காய்கறிகள், பழங்கள் நடவேண்டுமா? இதோ டிப்ஸ்!
Gardening Tips : ‘சீரான தோட்டம் சிறப்பான தோட்டம்’ வீட்டு கார்டனில் காய்கறிகள், பழங்கள் நடவேண்டுமா? இதோ டிப்ஸ்!

தோட்டக் குறிப்புகள்

உங்களுக்குத் தேவையான தோட்டக் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவை குறிப்பாக யாருக்கெல்லாம் உதவியாக இருக்கும் என்றால், தோட்டம் அமைக்கும் வேலையை துவங்கியுள்ளவர்களுக்குத்தான். தோட்டத்தை நீங்கள் கஷ்டப்பட்டு நடவேண்டாம். இந்த குறிப்புக்களை பின்பற்றினால் நீங்கள் மகிழ்ச்சியுடன் தோட்ட வேலைகளில் ஈடுபட முடியும்.

தோட்டத்தில் உள்ள நெடிகளை நடுவது, மீண்டும் நடுவது எப்படி பாருங்கள்?

செடிகளை நடுவது மற்றும் மீண்டும் நடுவது என தாவரங்களை நடுதல் பணிகள் ஒரு தாவரத்தை வளர்க்கும் அல்லது அதன் வளர்ச்சியைக் குலைக்கும்.

நீண்ட காலம் வளரும் தாவரங்களுக்கு முதல் 3 ஆண்டுகள் முதிர்ச்சியடையத் தேவை. அவற்றை நட்டது முதல், மூன்று ஆண்டுகள் முதிர காத்திருக்கவேண்டும். எனவே ஒவ்வொரு ஆண்டும் அதற்கு தேவையானவற்றை செய்து வரவேண்டும்.

உங்கள் தோட்டத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களை நடுவது எப்படி?

வீட்டுத் தோட்டம் என்றாலே, அதில் காய்கறிகள், பழங்கள் மற்றும் சின்ன மூலிகைச் செடிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். ஏனெனில் இவற்றை வீட்டுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றுதான். அவ்வாறு காய்கறிகள் நடும்போது நீங்கள் கட்டாயம் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னவென்று தெரிந்துகொள்வது அவசியம்.

காய்கறி தோட்டம் அமைக்கும் முறை

தக்காளிகளுக்கு தேவையான வெப்ப நிலை 68 முதல் 77 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகும். அதுதான் அவை பழக்க காரணமாகும். 85 டிகிரி ஃபாரன்ஹீட் என்பது தாவரங்கள் லைக்கோபென் மற்றும் கரோட்டின்களை தயாரிக்க அதிக சூடாகும்.

இந்த நிறமிகள்தான் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு நிறங்களைக் கொடுக்கின்றன. வெப்ப நிலை 50 டிகிரி ஃபாரன் ஹீட்டுக்கு குறைந்தால், பச்சைப் பழங்கள் பழுக்காது. தக்காளியில் உள்ள நிறம் கொஞ்சம் மாறினாலும், பழுக்க வைப்பதும் மாறும்.

உருளைக்கிழங்கு செடிகளை மண்ணில் ஆழத்தோண்டி வைக்கவேண்டும். கடுமையான இருளில் அறுவடை செய்த உருளைக்கிழங்குகளை வைக்கவேண்டும். அதை வெளிச்சத்தில் காட்டினால் அதன் தோல் பச்சையாகிவிடும். இந்த பசுமை நிறம் சோலனைன் என்ற ஆல்கலைனை உற்பத்தி செய்யும்.

இது கசக்கும் ஒரு நச்சுப்பொருள் ஆகும். அதிகம் உட்கொள்ளும்போது உடல் உபாதைகளை ஏற்படுத்தும். எனவே உருளைக்கிழங்கை சமைக்கும்போது அதில் உள்ள பசுமையான பகுதிகள் மறறும் முளைப்பு இருந்தால் அதை நீக்கிவிட்டு சமைக்கவேண்டும்.

உங்கள் வீட்டுத்தோட்டத்திற்கு தேவையான குறிப்புகள் இங்கு வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றை பயன்படுத்தி பலன்பெறுங்கள். தோட்ட குறிப்புகள் மட்டுமல்ல தேவையான மற்ற ரெசிபிக்கள் மற்றும் ஆரோக்கிய தகவல்களும் அன்றாடம் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. எனவே இவற்றை பயன்படுத்தி பலன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.