Gardening : சின்ன இடத்தில் கூட சிங்காரமான தோட்டம் அமைக்கலாம்! இதோ இந்த யோசனைகள் உதவும்!
Gardening : சின்ன இடத்தில் கூட சிங்காரமான தோட்டம் அமைக்கலாம். இதோ அதற்கு இந்த யோசனைகள் உங்களுக்கு உதவும். சிறிய தோட்டம் அமைத்து மகிழ குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதியில் நாம் நமது வீட்டுத் தோட்டங்களை அமைப்பது எப்படி என்பது குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். கண்டிப்பாக இங்கு கொடுக்கப்படும் தகவல்கள் உங்களுக்கு உதவும்.
உங்கள் வீட்டில் சிறிய இடம் மட்டுமே இருந்தால் கூட போதும், அதில் தோட்டம் அமைக்கலாம் அதற்கு என்னனென்ன தேவை என்பது குறித்து நேற்நு பார்த்தோம். நீங்கள் அதற்கு முதலில் திட்டமிட வேண்டும். சின்ன இடம் என்பதால் தொட்டிகள் தான் உங்களின் தேர்வு. நீங்கள் சரியான செடிகளை தேர்ந்தெடுத்து, அவற்றை நடவேண்டும்.
அடுக்கு தொட்டிகள், ஒரே தொட்டியில் பல்வேறு தாவரங்கள் வளரும் தொட்டிகளைத்தான் தேர்வு செய்ய முடியும். தாவரங்களை நடவு செய்யும் முறைகள் என அனைத்தையும் விரிவாகப் பார்த்தோம். மேலும் அதற்கு உதவும் விஷயங்கள் குறித்து இன்று பார்க்கலாம்.
இயற்கை வெளிச்சத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும்
உங்கள் வீட்டில் நீங்கள் தொட்டிகளை எங்கு வைக்கப்போகிறீர்கள் என்பதை முதலில் முடிவெடுத்துவிடுங்ஙகள். அங்கு இயற்கை வெளிச்சம், போதிய அளவு காற்று என அனைத்தும் தேவை. கீரைகள், மூலிகைச் செடிகள் மற்றும் சில வகை பூக்கள் என நிழலில் சிலவகை செடிகள் வளரும். அவற்றை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். தக்காளி, வெள்ளரி, ஸ்ட்ராபெரிகள் என அவை வளர உங்களுக்கு சூரிய வெளிச்சம் தேவை. அதற்கு தேவையான இடத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
சிறிய தொட்டிகள்
நீங்கள் தோட்டம் அமைக்க சிறிய தொட்டிகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் கொஞ்சம் இடத்தில் செடிகளை வளர்க்க விரும்பினால், அதற்கு சிறிய தொட்டிகள்தான் சிறந்தது.
ஏனெனில் சிறிய தொட்டிகளை நீங்கள் பால்கனிகளில் கூட வளர்க்கலாம் அல்லது ஜன்னல்களில் கூட வைத்துவிடலாம். நீங்கள் சிறிய இடத்தில் தொட்டியில் செடிகளை நட்டு வளர்க்கப்போகிறீர்கள் என்றால், நீங்கள் வாங்கும் விதை பாக்கெட்களில், காம்பேக்ட், டிட்டி ப்ளான்ட் ஹாபிட் அல்லது ஷாட் ஸ்டேச்சூர் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.
பீன்ஸ், வெள்ளரி, தக்காளி போன்ற தாவரங்களுக்கு பெரிய தொட்டிகள் தேவை. இவை இரண்டு அடிக்கும்மேல் இருக்கவேண்டும். கீரைகள், குடைமிளகாய், துளசி, ஓமவல்லி போன்ற மூலிகைகளை வளர்ப்பதற்கு சிறிய தொட்டிகளே போதும்.
உங்களுக்கு இன்னும் கொஞ்சம் அதிக இடம் இருந்தால், பெரிய தொட்டியை கொஞ்சம் உயரமாக அமைத்தில் அதில் மண்ணை நிரப்பி பல்வேறு தாவரங்களை வளர்க்கலாம். அது கார்டன் பெட் என்று அழைக்கப்படுகிறது. இயற்கை வெளிச்சத்துக்கு ஏற்ப, அடியில் உள்ள இடத்தை அதிகரித்து உங்கள் தோட்டத்தின் அளவை விரவுபடுத்தலாம்.
மூலிகைகளுக்கு ஜன்னல் சுவர்களில் உள்ள இடங்களே போதுமானது. அவற்றை அழகாக ஜன்னலில் அடுக்கி வைத்துவிடலாம். அதில் மலர் செடிகள், கீரைகளையும் வைத்துவிடலாம். 2 அடி அகலம் உள்ள ஒரு செடி, 4 முதல் 6 மூலிகைகளைக் அடக்கிவிடலாம் அல்லது கீரைகளை வளர்த்துக்கொள்ளலாம்.
தரமான மண்
அதிக தரமான மண்ணை பயன்படுத்துங்கள். அதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்க வேண்டும். ஆரோக்கியமாக தாவரங்கள் வளர அதில் நீங்கள் இயற்கை உரங்கள் அல்லது காய்கறி கழிவுகள் இடுவதை உறுதி செய்யவேண்டும். அனைத்து தாவரங்களின் வளர்ச்சிக்கு மண்ணின் தரம் மிகவும் அவசியம். காய்கறிகளின் அவற்றின் சுவையும் கூட மண்ணின் தரத்தால் நிர்ணியிக்கப்படுகிறது.
எனவே மண்ணின் தரத்தில் எவ்வித சமரசமும் வேண்டாம். நீங்கள் இயற்கை உரங்களை இட விரும்பினால் அதை மண்ணுக்கு அடியில் வைத்துவிடுங்கள். செடிகளை நட்ட பின்னர், இயற்கை தழைகளை அதில் போட்டால் அங்கு களைகள் வளராது, மேலும் வேர்களில் அது ஈரப்பதத்தை தக்கவைக்கும்.
தண்ணீர் விடுவது
சிறிய இடங்களில் வளர்க்கப்படும் தாவரங்கள் விரைவில் காய்ந்துவிடும். எனவே அவற்றுக்கு தேவையான அளவு தண்ணீர் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். உரங்களையும் அவ்வப்போது இட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் தாவரங்கள் செழித்து வளரும். தோட்டம் அமைப்பதை ஹாபியான வைத்திருந்தால் உங்களுக்கு நேரம் இருக்கும்.
தண்ணீர் விடுவதற்கும், களைகளை பறிக்கவும், உரங்களை இடுவதற்கும், குறிப்பாக கோடை காலங்களில் கவனமாக இருக்கவேண்டும். நீங்கள் தொட்டிகளில் செடிகளை வளர்க்க விரும்பினால், முதலில் ஒன்று அல்லது இரண்டு தொட்டிகளை வாங்குங்கள், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரியுங்கள் மொத்தமாக வாங்கி குவித்துவிட்டு, கஷ்டப்படாதீர்கள். நீங்கள் அதிகம் உழைத்தும் போதிய விளைச்சல் கிடைக்காமல் போகும். எனவே பொறுமையாக செய்யுங்கள்.
சமூக தோட்டம்
உங்கள் வீடு உங்களுக்கு போதவில்லையா? உங்கள் அருகில் உள்ளவர்களுடன் சேர்ந்து சமூக தோட்டம் அமைக்கலாம். இதனால் நமது உணவுக்கு தேவையானவற்றை நாமே விளைவித்துக்கொள்ளலாம். மனஅழுத்தத்தையும் போக்கும்.
உங்கள் வீட்டின் பின்புறம் அழகாக இருக்கும். சிறிய இடத்திலேயே சரியான தாவர தேர்வு, திட்டம், நேரம் மற்றும் ஆற்றல் செலவிட்டால் அழகான தோட்டத்தை அமைக்க முடியும். சிறிய வீட்டில் கூட சிங்காரமான தோட்டம் அமைத்து பலன்பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்