Relationship: 'ஒரு நாளைக்கு இவ்வளவு ஷிப்ட்டா!'- ஆத்திரத்தில் கணவரின் உறுப்பை கடித்து துப்பிய மனைவி
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Relationship: 'ஒரு நாளைக்கு இவ்வளவு ஷிப்ட்டா!'- ஆத்திரத்தில் கணவரின் உறுப்பை கடித்து துப்பிய மனைவி

Relationship: 'ஒரு நாளைக்கு இவ்வளவு ஷிப்ட்டா!'- ஆத்திரத்தில் கணவரின் உறுப்பை கடித்து துப்பிய மனைவி

I Jayachandran HT Tamil
Jun 10, 2023 05:00 AM IST

இல்லற உறவில் ஏற்பட்ட கோபத்தில் கணவரின் உறுப்பை கடித்து துப்பிய பெண் பற்றிய சம்பவம் இது.

இல்லற உறவில் ஏற்பட்ட கோபத்தில் கணவரின் உறுப்பை கடித்து துப்பிய பெண்
இல்லற உறவில் ஏற்பட்ட கோபத்தில் கணவரின் உறுப்பை கடித்து துப்பிய பெண்

கேசவன் சொந்தமாக லேத் பட்டறை நடத்தி வந்தார். வீட்டின் ஒருபக்கமாக பட்டறை. வேலை நடக்கும் நேரம் போக வீட்டில்தான் கேசவன் இருப்பார். ரம்யா மீது மிகுந்த பாசமாக இருப்பார். எதைக் கேட்டாலும் வாங்கித்தருவார். வார இறுதியில் கட்டாயம் சினிமாவுக்கு அழைத்துச் செல்வார். தினசரி ரம்யாவுடன் இணைவார்.

திருமணமான புதிதில் ரம்யாவுக்கு இது மிகவும் பிடித்திருந்தது. தனிக்குடித்தனம் என்பதால் நினைக்கும்போதெல்லாம் இருவரும் சந்தோஷமாகக் கூடி மகிழ்வர். தினமும் பலமுறை இப்படி மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இந்நிலையில் திருமணம் ஆகி முதல் ஆண்டு நிறைவதற்குள் ரம்யா ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார்.

குழந்தை பிறக்கும் முதல்நாள் வரைக்கும் ரம்யாவுடன் கேசவன் உறவு வைத்துக் கொண்டார்.

பின்னர் குழந்தையைக் கவனிக்கும் பொறுப்பு ரம்யா மீது விழுந்ததால் கேசவனின் ஆசையை உடனடியாகத் தீர்க்க முடியாவிட்டாலும் குழந்தை அயர்ந்தவுடன் வந்து சேர்வார்.

இப்படி அவர்களது வாழ்க்கை ரம்மியமாகப் போய்க் கொண்டிருந்ததாக நினைத்தவேளையில் ரம்யா மிகவும் சோர்ந்து போய்விட்டார். தனது கணவர் ஆசைக்கு அவரால் தீனி போட முடியவில்லை.

இது பற்றி ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாலியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் காமராஜிடம் கூட ரம்யா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தனது கணவர் தினமும் 10 முறையாவது உறவு வைத்துக் கொள்வதாகவும் இது தன்னால் முடியவில்லை என்றும் உடல்ரீதியாக பெரும் வேதனையாக இருப்பதாகவும் கூறினார்.

ரம்யா சொன்னதைக் கேட்டுக் கொண்ட டாக்டர், கேசவன் உறவு கொள்ளும் ஒவ்வொரு சமயத்திலும் விந்தை வெளியிடுகிறாரா என்று கேட்டார். அதற்கு ரம்யா ஆமாம் என்று பதிலளித்தார்.

அதற்கு டாக்டர், கேசவனின் கேஸ் சற்றே வித்தியாசமாக இருக்கிறது. பொதுவாக திருமணமான புதிதில் கணவரும் மனைவியும் இதுபோல் தினமும் பலமுறை உறவு கொள்வது இயல்பு. ஆனால் இந்த விஷயத்தில் கேசவனின் போக்கு விசித்திரமாக இருக்கிறது என்பதால் எதற்கும் அவரை ஒரு உளவியல் நிபுணரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை பெறுமாறு பரிந்துரைத்தார்.

இதைத் தொடர்ந்து ரம்யா கேசவனிடம் இதுபற்றி பேசிப்பார்த்தார். ஆனால் சைக்கியாட்ரிஸ்டிடம் வர கேசவன் மறுத்துவிட்டார். அத்துடன் கோபத்தில் மேலும் பல முறை உறவு கொள்ளத் தொடங்கினார்.

தனது உடல்நிலைமையை ரம்யா எடுத்துச் சொல்லியும் கேசவன் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் ஒரு நாள் பொறுக்கமாட்டாத ரம்யா கேசவனின் உறுப்பை கடித்து துப்பிவிட்டார்.

ரத்தப்பெருக்கில் அலறித்துடித்த கேசவனின் குரல் கேட்டு அவரது லேத் வேலயாட்கள் ஓடிவந்து அவரைக் காப்பாற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர்.

இதுபற்றி கேவசன் தந்த புகாரின் பேரில் போலீஸார் வந்து ரம்யாவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் பற்றி உளவியல் நிபுணர்களிடம் கேட்டபோது, கேசவனின் நடத்தை அசாதாரணமானது. இல்லறம் என்பது கணவர் மனைவி இருபாலருக்கும் சமஉரிமை, சமபங்கு உடையது. இதில் ஒருவருக்கொருவர் தங்களது விருப்பு வெறுப்புகளை தெரிவித்து வாழ்க்கையை நடத்துவதுதான் முறையாகும்.

யாரும் யாரையும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. கேசவன் ரம்யாவின் விருப்பத்துக்கு மாறாக நடந்துள்ளார். இதுபற்றி பலமுறை ரம்யா மன்றாடிக் கேட்டுக் கொண்டபோதும் கேசவன் தனது நடத்தையைக் குறைத்துக் கொள்ளவில்லை. மாறாக மேலும் மேலும் ரம்யாவுக்குத் துன்பம் தரும்வகையில் மிருகம் போல நடந்து கொண்டிருப்பது வருத்தம் தரக்கூடிய விஷயம். இதற்காக ரம்யா மீது பரிதாபம்தான் கொள்ள முடியும்.

கேசவன் ஒத்துழைத்திருந்தால் தகுந்த உளவியல் சிகிச்சை பெற்று சந்தோஷத்துடன் குடும்பம் நடத்தியிருக்கலாம். இதுவும் ஒருவகை மனப்பிறழ்ச்சிதான்.

அபரிமிதமான பாலுணர்வு விசித்திரமானதுதான். இது கேசவன் ரம்யா வாழ்க்கையில் பெரும் சோகத்தைத் தந்துவிட்டது. உலகில் இதுபோல் அபூர்வமாக சிலருக்கு இப்படி நடப்பதுண்டு. வேறு விஷயங்களினால் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு சில ஆண்கள் இப்படி ஆவேசத்துடன் பல முறை பாலுறவில் ஈடுபடுவதுண்டு. அதுதான் இவர்களது விஷயத்திலும் நடந்துள்ளது. இது இல்லறத்தை நிச்சயம் பாதிக்கும். அப்படியே நடந்து விட்டது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சென்றுதானே நம் முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். அது ரம்யா வாழ்க்கையில் நிஜத்திலேயே நடந்துவிட்டது. விளைவு இத்தகைய அசம்பாவிதம். பாவம் ரம்யா!

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.