Erectile Dysfunction: விறைப்புத்தன்மை குறை இருக்கா.. கவலையைவிடுங்க.. இதைச் சாப்பிடுங்க!
விறைப்புத்தன்மையை சரிசெய்ய நாம் உண்ண வேண்டிய உணவுகள் குறித்து காண்போம்.
நடப்பு காலங்களில் விறைப்புத்தன்மை குறைபாட்டுப் பிரச்னை பல்வேறு ஆண்களுக்கும் ஏற்படுகிறது. பிறப்புறுப்பில் ஏற்படும் ரத்த ஓட்ட தடையால் விறைப்புத்தன்மை குறைகிறது. காரணம், நாம் இன்று எடுத்துக்கொள்ளும் சத்தில்லாத உணவுப்பொருட்கள் எனலாம். குறிப்பாக, ஃபாஸ்ட் புட் உணவுகள், சைனீஸ் உணவுகள், ஜங்க் ஃபுட் ஆகியவை நமது உடம்பில் விறைப்புத் தன்மையை குறைத்துவிடுகின்றன. இதனாலேயே, பலருக்கும் குழந்தைப் பேறு இல்லாத சூழல் ஏற்பட்டு விடுகிறது.
இதனைத் தவிர்க்க நாம் சேர்க்க வேண்டிய உணவுகள் குறித்தும் நீக்க வேண்டிய உணவுகள் குறித்தும், செய்யவேண்டிய மருத்துவ நடைமுறைகள் குறித்தும் இக்கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கீரைகள்: தெருக்களில் விற்பனை செய்துவரப்படும் கீரைகளில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே, தினசரி ஒரு கீரையினை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக, முருங்கைக்கீரையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
காபி: ஒரு நாளைக்கு இந்தியர்கள் குறைந்தபட்சம் இரண்டில் இருந்து மூன்று முறை காபி குடிக்கின்றனர். காபியில் இருக்கும் காஃபினால் விறைப்புத்தன்மை குறைகிறது. எனவே, அதனை குறைவாக எடுத்துக்கொள்ளலாம்.
வெள்ளைப்பூண்டு: வெள்ளைப்பூண்டு, ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்பினைக் கரைத்து, ரத்தம் சீராக உதவும். வெள்ளைப்பூண்டில் இருக்கும் s-அல்லில் சிஸ்டைன் என்னும் மூலப்பொருள், விறைப்புத்தன்மையை அதிகரிக்க உதவும்.
தர்பூசணி: தர்பூசணி விறைப்புத்தன்மை பிரச்னை நிகழாமல் இருக்க உதவும் உணவுப்பொருளாகும். தர்பூசணியில் இருக்கும் லைகோபீன் ஊட்டச்சத்து விறைப்புத்தன்மையை அதிகரிக்கும்.
வால்நட்ஸ்: வால்நட்ஸ் என்னும் உலர் பழங்களில் போலிக் அமிலம், வைட்டமின் ஈ, அர்ஜினைன், நார்ச்சத்து நிரம்பியுள்ளது. அர்ஜினைன், உடலில் நைட்ரிக் ஆக்சைடை தயார் செய்து விறைப்புத்தன்மையை அதிகரிக்கிறது.
பாதாம்: பாதாமில் வைட்டமின் இ, செலினியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இதனை தினசரி எடுத்துக்கொள்வதன் மூலம் விறைப்புப்பிரச்னை சரியாகும்.
இஞ்சி: இஞ்சியில் பொட்டாசியம், வைட்டமின் பி6, மாங்கனீசு போன்ற சத்துக்கள் உள்ளன. இவை விறைப்புத்தன்மை அதிகரிக்க செய்யும்
மாதுளை ஜூஸ்: மாதுளையினை தொடர்ந்து குடித்து வந்தால், ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் விறைப்புத்தன்மை அதிகரிக்கும்.
தவிர்க்க வேண்டியவை: கண்டிப்பாக புகை மற்றும் மது அருந்தக்கூடாது. இரவில் நீண்ட நேரம் தூங்காமல் இருக்கக்கூடாது. தேவையில்லாமல் எதையும் போட்டு யோசிக்கக்கூடாது; ரிலாக்ஸாக இருக்கவேண்டும். முடிந்தளவு கொழுப்பு உணவுப்பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்
டாபிக்ஸ்