பாதுகாப்பான பண பரிமாற்றத்தை மேற்கொள்ள கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள்…
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பாதுகாப்பான பண பரிமாற்றத்தை மேற்கொள்ள கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள்…

பாதுகாப்பான பண பரிமாற்றத்தை மேற்கொள்ள கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள்…

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 02, 2022 11:50 PM IST

ஆன்லைன் மூலம் பரிமாற்றம் மேற்கொள்ளும்போது உஷராக இல்லாவிட்டால் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக அதிக பண இழப்புகள் ஏற்படலாம். இதுபோன்ற சிக்கல்களை தவிர்ப்பதற்கு பாதுகாப்பாக ஆன்லைன் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கான சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

<p>பாதுகாப்பான ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான டிப்ஸ்</p>
<p>பாதுகாப்பான ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான டிப்ஸ்</p>

பணம் பெறுபவரின் தொடர்பு எண் இருந்தாலோ அல்லது க்யூஆர் கோட் ஸ்கேன் செய்தாலோ போதுமானது பண பரிவர்த்தனையை மேற்கொண்டுவிடலாம். யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள கூகுள் பே, போன் பே உள்பட பல்வேறு செயலிகளை உள்ளன. இவற்றில் பணப்பரிமாற்றம் செய்யும்போது சில டிப்ஸ்களை பின்பற்றினால் பண இழப்பு ஏதும் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

மிக முக்கியமாக ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யும்போது மிகவும் கவனமாகவும், அதேசமயம் சைபர்மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் செயல்பட வேண்டும். ஒரு தவறான இணைப்பை கிளிக் செய்தால் கூட உங்களை பற்றி அனைத்து தரவுகளும் மோசடிப்பேர்வளிக்கு சென்று, அவரது வலையில் நீங்கள் சிக்கக்கொள்ள நேரிடும்.

ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதென்பது மிகவும் எளிமையானதுதான். உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தாலே ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ளும் செயலிகளை பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் வங்கி கணக்கு மற்றும் உங்கள் மொபைல் எண் ஆகியவற்றை இணைக்க வேண்டும். கூகுள் பே, போன் பே, பேடியெம் போன்ற ஆன்லைன் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் செயலிகளில் மேற்கூறியவற்றை செய்து கொல்வதன் மூலம் மிகவும் பாதுகாப்பான பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம்.

யுபிஐ போன்ற ஆன்லைன் பரிமாற்றங்கள் மேற்கொள்பவர்கள் கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்

ஸ்கிரீன் லாக்: உங்கள் மொபைல் ஸ்கிரீனை பாஸ்வேர்டு அல்லது பின் மூலம் லாக் செய்து கொள்ள வேண்டும். போனுக்கு மட்டுமல்லாமல் ஆன்லைன் பரிமாற்றம் மேற்கொள்ளும் செயலிகளுக்கும் மிக முக்கயமாக பாஸ்வேர்டு லாக் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்களது போனை தவறான நோக்கத்துடன் கையாளுபவர்களிடமிருந்து பாதுகாக்கும். குறிப்பாக உங்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும். நீங்கள் வைக்கும் பாஸ்வேர்டானது மிக முக்கியமாக உங்களது பெயர் அல்லது பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற எளிதிக் யூகிக்கூடியதாக இருக்க கூடாது.

உங்களது பின் எண்களை யாரிமும் பகிர வேண்டாம்: உங்கள் மொபைல் மற்றும் அதிலுள்ள இதர செயலிகள் தொடர்பான பின் எண்களை யாரிடமும் பகிர வேண்டாம். ஒரு வேளை நீங்கள் அதை பகிர்ந்தால் மோசடிபேர்வளிகளால் பாதிக்கப்படலாம். ஏனென்றால் உங்கள் மொபைலை யார் வேண்டுமானாலும் பயன்படுத்து அதன் பணத்தை தங்களது கணக்கில் பரிமாறலாம். ஒரு வேளை உங்களது பின் எண் வேறொருவருக்கு தெரிந்துவிட்டது என சந்தேகித்தால் உடனடியாக மாற்றி அமைத்து கொள்ள வேண்டும்.

சரிபார்க்கப்படாத இணைப்புகளை கிளக் செய்வதையும், போலி அழைப்புகளை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்: ஏராளமான போலி மெசேஜ்கள் பல்வேறு இணைப்புகளை கொண்டு மொபைலில் இன்பாக்ஸில் வந்து சேரும். சரிபார்க்கப்படாத அந்த இணைப்புகளை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்துவிட வேண்டாம். இதன் மூலம் மிகப்பெரிய இழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

அதேபோல் மொபைல் போன்களுக்கு வரும் போலி அழைப்புகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு வரும் அழைப்புகள் வங்கியில் இருந்து அழைப்பதாகவும், வேறு சில நிறுவனங்களில் இருந்து அழைப்பதாகவும் தெரிவித்து, உங்கள் வங்கியின் பின், ஓடிபி போன்ற தகவல்களை கேட்பார்கள்.

பொதுவாக ஹேக்கர்கள் லிங்குகளை ஷேர் செய்தும், போலி அழைப்புகளை அழைத்தும் சரிபார்ப்பு என்று கூறி மூன்றாம் பார்ட்டி செயலிகளை பதிவிறக்கம் செய்ய சொல்வார்கள். எந்தவொரு வங்கியும் உங்களிடம் பின் எண், ஓடிபி போன்ற தனிப்பட்ட தகவல்களை கேட்காது என்பது கவனித்தில் கொள்ள வேண்டும்.

யுபிஐ செயலியை அடிக்கடி அப்டேட் செய்ய வேண்டும்: மொபைலில் இரு்ககும் அனைத்து செயலிகளையும் அப்டேட் செய்துகொள்வதென்பது மிகவும் அவசியமானது. இதன் மூலம் அந்த செயலியின் புதிய அம்சங்களை பெறலாம். எனவே உங்கள் யுபிஐ செயலி லேட்டஸ்ட் வெர்ஷனில் அப்டேட் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

பல பண பரிமாற்ற செயலியை பயன்படுத்துவதை தவிர்க்கவும்: உங்கள் மொபைலில் பல்வேறு பண பரிமாற்ற செயலிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மிகவும் நம்பகதனமான, சரிபார்க்கப்பட்ட செயலிகளை ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும்.

Whats_app_banner

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.