Fish Puttu: பால் சுரப்பை அதிகரிக்கும் உதவும் சுறா புட்டு; இப்படி ஒரு முறை செய்து பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Fish Puttu: பால் சுரப்பை அதிகரிக்கும் உதவும் சுறா புட்டு; இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

Fish Puttu: பால் சுரப்பை அதிகரிக்கும் உதவும் சுறா புட்டு; இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 17, 2023 09:17 AM IST

ருசியான மீன் புட்டு செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்.

மீன் புட்டு
மீன் புட்டு

தேவையான பொருள்கள்

சுறா மீன்

சின்ன வெங்காயம்

பச்சை மிளகாய்

சோம்பு

கறிவேப்பிலை

எண்ணெய்

முட்டை

மஞ்சள் தூள்

கரம் மசாலா

மல்லி இலை

கேரட்

தேங்காய்

வாழை இலை

இஞ்சி பூண்டு

செய்முறை

ஒரு கிலோ அளவிற்கு சுறா மீன் துண்டுகளை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு இட்லி தட்டின் மீது வாழை இலையை வைத்து கொள்ள வேண்டும். அதன் மீது சுத்தம் செய்து எடுத்த மீன் துண்டுகளை சேர்க்க வேண்டும். ஒரு 10 நிமிடம் நன்றாக மீன் துண்டுகளை ஆவியில் வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

சூடு இறங்கிய பின்னர் மீன் துண்டுகளின் மேல் தோலை நீக்கி அதில் உள்ள முள்ளையும் நீக்க எடுத்து கொள்ள வேண்டும். மேலும் வெந்து எடுத்த மீனை சிறிது சிறிதாக பொடித்து கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் அரை ஸ்பூன் கடுகு உளுந்தப்பருப்பை சேர்த்து பொரிய விட வேண்டும்.

கடுகு பொரிந்த பிறகு காரத்திற்கு 3 பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். அதில் 100 கிராம் அளவு சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து கலந்து விட வேண்டும். 

அதில் இரண்டு கொத்து கறிவேப்பிலையையும் சேர்த்து கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு 2 முட்டையை உடைத்து அதில் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் அரைஸ்பூன் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக பிரட்டி விட வேண்டும். 

முட்டை வெந்த பிறகு அதில் பொடித்து வைத்த மீன் துண்டுகளை சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது மீனுக்கு தேவையான உப்பை சேர்த்து கொள்ள வேண்டும். நன்றாக மீனில் இருந்த தண்ணீர் வற்றி பிரட்டலாக வரும்போது அதில் கொஞ்சம் துருவி கேரட்டை சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் அதில் துருவிய தேங்காய் பூவையும் சேர்த்து கொள்ள வேண்டும். கடைசியா மல்லி இலையை சேர்த்து விட்டால் அவ்வளவு தான் ருசியான மீன் புட்டு ரெடி.

இது உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.